Advertisment

நடிகை நீது சந்திராவிடம் பேரம் பேசிய தொழில் அதிபர்: 'மனைவியாக வாழ மாதம் ரூ25 லட்சம் சம்பளம்'

நடிகை நீது சந்திரா சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், “தனக்கு சினிமாவில் வேலை இல்லாததால், பெரிய தொழிலதிபர் ஒருவர் மாதம் ரூ.25 லட்சம் சம்பளத்துக்கு மனைவியாக இருக்க முடியுமா என்று கேட்டு பேரம் பேசினார்” என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
neetu chandra, nitu chandra, நீது சந்திரா, நடிகை நீது சந்திரா, நீது சந்திரா அதிர்ச்சி பேட்டி, ரூ25 லட்சம் சம்பளத்துக்கு மனைவி, neetu chandra movies, casting director bollywood, bollywood dark stories, bollywood news

நடிகை நீது சந்திரா சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், “தனக்கு சினிமாவில் வேலை இல்லாததால், பெரிய தொழிலதிபர் ஒருவர் மாதம் ரூ.25 லட்சம் சம்பளத்துக்கு மனைவியாக இருக்க முடியுமா என்று கேட்டு பேரம் பேசினார்” என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

Advertisment

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என பிஸியாக இருந்த நடிகை நீது சந்திராவுக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் அவர் திரையில் தோன்றுவது குறைந்தது. பின்னர், பட வாய்ப்புகளே இல்லாமல் போனது.

நடிகை நீது சந்திரா, நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து பேசிய நீது சந்திரா, நடிகை மட்டுமாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், கிளாசிக்கல் டான்சர் என பன்முக ஆளுமையுடன் இருந்தார். ஆனால், அவருக்கு சினிமாவில் வாய்ப்புகளே இல்லாமல் போனது.

இந்த நிலையில், நடிகை நீது சந்திரா சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், “என்னுடைய வாழ்க்கை வெற்றிகரமான நடிகையின் தோல்விக் கதை. 2005-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நான் தேசிய விருது வாங்கிய 12-க்கும் அதிகமான நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு எனக்கு வேலை இல்லை. இதனால் பெரிய தொழிலதிபர் ஒருவர் என்னிட்ம் மாதம் ரூ.25 லட்சத்தில் சம்பள மனைவியாக இருக்க முடியுமா என்று என்னிடம் கேட்டார். அவர் அப்படிக் கேட்டது எனக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. இப்போது என்னிடம் பணமோ, வேலையோ இல்லை. மிகவும் கவலையாக உள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

மேலும், அந்த நேர்காணலில், “இத்தனைப் படங்களில் நடித்த பிறகும் நான் இங்கு வேண்டப்படாதவளாக மாறிவிட்டேன். முன்னணி இயக்குநர் ஒருவர் என்னை பட ஒத்திக்கைக்கு அழைத்திருந்தார். ஒத்திகை முடிந்து ஒரு மணி நேரத்தில் என்னை நிராகரித்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

நீது சந்திரா ஹாலிவுட்டில் அறிமுகமாகி இரண்டு படங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் நடித்தது குறித்து நீது சந்திரா கூறுகையில், “அனைத்தும் மாறிக்கொண்டுதான் இருக்கும்.

ஹாலிவுட்டில் நான் யாருடைய துணையும் இல்லாமல் நுழைந்ததை சிலரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதோடு, அவர்களால் நம்ப முடியவில்லை. இதற்கு முன்பு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம்கூட பல முறை எனது மனதில் வந்து சென்றது.” என்று தெரிவித்துள்ளார்.

`கரம் மசாலா' என்ற படத்தில் அறிமுகமான நடிகை நீது சந்திரா, 13-பி, டிராபிக் சிக்னல், தமிழில் ஆதி பகவன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த சில படங்களுக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment