Advertisment

Neeya 2 Movie Review: மிரட்டும் பாம்பு மனுஷி

Neeya 2 Full Movie With Raai Laxmi: பாம்பு மனுஷியாக ராய் லட்சுமி நடித்திருக்கிறார். படத்தில் அவரது கேரக்டரே அதிகமாக வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Neeya 2 Review In Tamil, Neeya 2 Full Movie Free Download, நீயா 2 விமர்சனம்

Neeya 2 Review In Tamil, Neeya 2 Full Movie Free Download, நீயா 2 விமர்சனம்

Neeya 2 Review In Tamil: பேய்க் கதையான காஞ்சனா 3 வெற்றியைத் தொடர்ந்து பாம்பு கதையான நீயா 2 வந்திருக்கிறது. முன்னதைப் போலவே இதிலும் 3 ஹீரோயின்கள்!

Advertisment

கமல்ஹாசன் - ஸ்ரீபிரியா நடிப்பில் 1979-ல் வெளியானது ‘நீயா’ படம். அதற்கும் நீயா 2-க்கும் சம்பந்தமே இல்லை. ஜெய் ஹீரோவாகவும், ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் ஹீரோயின்களாகவும் நடித்திருக்கிறார்கள். எல்.சுரேஷ் இயக்கியிருக்கிறார்.

Neeya 2 Review In Tamil, Neeya 2 Full Movie Free Download, நீயா 2 விமர்சனம் Neeya 2 Review In Tamil

Neeya 2 Tamil Movie Review: நீயா 2 படம் விமர்சனம்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இழந்த காதலரைத் தேடி, ஒரு பாம்பு மனுஷி நடத்தும் போராட்டமே கதை. பாம்பு மனுஷியாக ராய் லட்சுமி நடித்திருக்கிறார். படத்தில் அவரது கேரக்டரே அதிகமாக வருகிறது. 20 அடி நீள பாம்பையும் படத்தில் ஓட விட்டிருக்கிறார்கள்.

Read More: Neeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

கேத்தரின் தெரசாவின் நடிப்பு ஓ.கே! ஆனால் வரலட்சுமியின் கேரக்டர் வேஸ்ட். ஒளிப்பதிவு பரவாயில்லை. அடுத்தடுத்த ஃப்ளாஷ்பேக் காட்சிகள் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. திரைக்கதை பலவீனமும் அதற்கு காரணம்.

மொத்தத்தில் பாம்பு கதையை எடுத்தவர்கள், அதை சுவாரசியமாக சொல்லக்கூட முடியாமல் போனது துரதிருஷ்டம். முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் இருந்தும், கதை தேர்வில் எப்படி சோடை போனார்கள் எனத் தெரியவில்லை.

சூப்பர் டீலக்ஸ், கனா மாதிரியான படங்களை தந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு திருஷ்டி சுற்றிப்போட வந்திருக்கிறது நீயா 2. தியேட்டருக்குள் உள்ளே உட்கார விடாமல், ரசிகர்களை மிரட்டுகிறாள் இந்த பாம்பு மனுஷி.

 

Jai Varalakshmi Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment