தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் ரசனைக்கேற்ப சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்புவதில் விஜய் டிவிக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த சேனலில் வரும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதில் பங்கேற்று வரும் நடிகர் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
அந்த வகையில் விஜய் டிவியின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் ரியாலிட்டி ஷோ நீயா நானா. பல ஆண்டுகளாக வரவேற்ப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வரும் இந்நிகழ்ச்சி ஒரு விஷயத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் உள்ள இரு தரப்பினரின் கருத்துக்களை கேட்டுகும் நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
இவரை வெறும் கோபிநாத் என்று சொல்வதை விட நீயா நானா கோபிநாத் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு நிகழ்ச்சிக்கும் இவருக்குமான பிணைப்பு ஆழமாக உள்ளது. அதற்கு ஏற்றார்போல் பலருக்கு பிடித்த மாதிரி நிகழ்ச்சியை தனது கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
பட்டிமன்ற பேச்சாளரான இவர், ஆசிரியர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாது நிமிர்ந்து நில், திருநாள் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தனது சிறப்பாக பேச்சுத்திறமைக்காக அறியப்படும் கோபிநாத், பல்வேறு கல்லூரி விழாக்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியுள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கோபிநாத், அவ்வப்போது பயனுள்ள கருத்துக்களை வெளியிட்டுவருகிறார். இந்நிலையில் ஏற்கனவே கோபிநாத்தின் குடும்பம் பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், அவருடைய அண்ணன் யார் என்பது குறித்து வெளியான தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நாயகி மகாவின் அப்பாவாக நடித்த பிரபாகரன் சந்திரன் தான் நீயா நானா கோபிநாத்தின் அண்ணன். சமீபத்தில் அந்த சீரியல் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும், பாரதிதாசன் காலனி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவர் தான் கோபிநாத்தின் சகோதரரா என்ற பலரும் ஆச்சரியடைந்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil