பலதரப்பட்ட சமூக தலைப்புகளை விவாதிக்கும் நீயா நானா ? நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. இன்று காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில்,தமிழ் பசங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விசயம் என்ன? என்ற தலைப்பில் நிகழ்ச்சி விவாதிக்கப்பட்டது.
தமிழ்மொழி தெரியாத சில பெண்கள் தமிழ் பசங்ககிட்ட தங்களுக்கு பிடிச்ச சில விசயங்களை பகிர்ந்தவாறு ட்ரைலர் ஒன்று வெளியானது.
தமிழ் பசங்க அவுங்க அம்மா மேல பாசமா இருப்பாங்க:
ட்ரைலர் காட்சியில், ஒரு பெண் தமிழ் பசங்க அவுங்க அம்மா மேல ரொம்ப பாசமா கேரிங்கா இருப்பாங்கனு தெரிவித்தார். கோபிநாத் அந்த பெண்ணிடம் இது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்க , அந்த பெண் மீண்டும் பேசத் தொடங்கினார்,’ எனக்கு நிறைய தமிழ் பசங்க பிரண்ட்ஸ் இருக்காங்க, அவுங்ககூட பழகினதுக்கு அப்புறம் தான் இந்த உண்மை தெரிஞ்சது என்று கூறினார்.
தமிழ் பசங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விசயம் என்ன? ????
நீயா நானா – நாளை காலை 11:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTelevision pic.twitter.com/nJwbDq0NuC
— Vijay Television (@vijaytelevision) February 8, 2020
பார்த்திபன் என்ட்ரி: நீயா? நானா? ஆண்கள் வரிசையில் இருக்கும் தமிழ் பசங்கள உங்களுக்கு யாரேனும் தெரியுமா என்று கேட்டார். தெரியும் என்று சொன்ன அந்த பெண், உடனே அங்கிருந்த பார்த்திபனைக் கைகாட்டினார்.
பிறகு தனது உரையைத் தொடர்ந்த அந்த பெண், ” தமிழ் பசங்க வீட்டுக்கு நண்பர்கள் யாரேனும் வருகை தந்தால் நன்கு கவனிக்குமாறு தனது அம்மாக்களை வற்புறுத்துவார்கள். அம்மாவும் சற்றும் முகம் சுளிக்காமல் செய்து கொடுப்பார்கள் என்றார். இது நல்ல உறவின் அடையாளம் என்பது அவரின் வாதத்தின் அடிநாதமாக இருந்தது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Neeya naana gopinath surprised over girls comments