neeya naana hotstar neeya naana gopinath : நீயா? நானா? நிகழ்ச்சியின் ஹீரோ. மொத்த அரங்கத்தையும் சாதுர்யமான பேச்சினால் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆளுமைத்திறனுக்கு சொந்தக்காரர் கோபிநாத். எந்த ஒரு கருத்தையும் ஆணித்தரமாக முன்வைத்து, சொல்லி வேண்டிய விசயத்தை, தெளிவாக சொல்லி மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் நீயா? நானா?, என்தேசம் என் மக்கள் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத்தின் வெற்றி.
நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் இன்று உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்பவர். ஆழமாகவும், ஆர்வம் குறையாமல் பிறர் கேட்கும் வகையிலும் பேசுவதில் வல்லவர்.
இன்றளவிலும் நீயா நானா நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முழு காரணமும் கோபிநாத்தின் பேச்சு என்றே கூறலாம்.
அம்மாவும், மூத்த மகனும் VS இளைய மகன்!
நீயா நானா – வரும் ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTelevision pic.twitter.com/2FOVGjowLG
— Vijay Television (@vijaytelevision) February 5, 2021
இந்த வார நீயா நானா களைக்கட்ட போகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. காரணம், இந்த வார டாப்பிக் அப்படி. வீட்டில் 2 பிள்ளைகள் இருந்தால் அம்மாவின் பாசம் அதிகம் யாருக்கு? என்பது தான். அதிலும் குறிப்பாக மூத்த பிள்ளைகள் பக்கமாக தான் நிறைய தாய்மார்கள் உள்ளனர்.
சப்பாட்டில் துவங்கி துணி வைப்பது செல்லமாக பார்த்துக் கொள்வது என நம்ம குடும்பத்தில் நடப்பது தான் இந்த வார எபிசோட்.