Neeya Naana on Vijay TV : விஜய் டிவி-யில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ’நீயா நானா’ நிகழ்ச்சி ஒளிபரப்பட்டு வருகிறது. படு சீரியஸான விஷயம் முதல், சுவாரஸ்யமான விஷயம் வரை பல தலைப்புகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும். குறிப்பிட்ட அந்த தலைப்பை பல்வேறு கோணங்களில் பங்கேற்பாளர்களும், தொகுப்பாளர் கோபிநாத்தும் அலசி ஆராய்வார்கள்.
இனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி!
அந்த வகையில் இந்த வாரம் அந்தந்த ஊர்களின் உணவு பழக்கத்தைப் பற்றி ஆராய்கிறார்கள். அப்போது உணவை ஒட்டிய பழமொழிகளைப் பற்றி கோபிநாத் கேட்க, “திண்ணுக் கெட்டவன் தஞ்சாவூர்காரன்” என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர். ”ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கல” என நாகர்கோவிலில் சொல்வார்கள் என இன்னொருவர் கூறினார். “ஊசிப்போல தொண்ட உருளி போல வயிறு” என திருநெல்வேலி பக்கம் சொல்வார்கள் என அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் கூறினார்.
”கிழவி சும்மா குழம்பு வச்சா, சொர்க்கமும் சொக்குமாம்” என காரைக்குடிக்கார பெண் ஒருவர் கூறினார். சும்மா குழம்புன்னா என்ன என்று கோபிநாத் கேட்க, “பருப்பு, பச்சை மிளகாய்ன்னு இருக்குறத போட்டு வைக்கிறது தான் சும்மா குழம்பு” என்று விளக்கம் தந்தார் அந்த பெண். ”மாதா ஊட்டாத சோற மாங்கா ஊட்டும்” என்ற தஞ்சாவூர் பெண், தஞ்சையில் மாமரங்கள் நிறைந்திருக்கும், அதனால் சாம்பார், புளிக்குழம்பு என எல்லாவற்றிலும் மாங்காய் சேர்த்துக் கொள்வோம் என்றார்.
சூரிய ஒளி மூலம் இயங்கிய ஆளில்லா விமானம்… விரைவில் பயணிகளை அழைத்துச் செல்ல திட்டம்!
இதனைப் பார்க்கும் அனைவருக்கும் இன்னும் இதுபோல உணவை மையமாக வைத்து வேறென்ன சொல்லாடல்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துக் கொள்ள ஆர்வம் அதிகரிக்கிறது.