தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, தனுஷ், சிம்பு காலம் வரை பல தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் வாலி. தனது தனித்துவமான பாடல் வரிகளால் ரசிகர்களை கவர்ந்து இழுத்திருந்தார்.
இப்படி எண்ணிலடங்காத பாடல்கள் எழுதிய வாலி, தான் பாடல் எழுதுவதற்கு ஒரேயொரு கண்டிஷன் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு விதித்திருந்ததாக, அவருடன் நெருக்கமாக பழகிய நெல்லை ஜெயந்தா தெரிவித்துள்ளார்.
அதன்படி, பாடல் எழுதுவதற்கு ரூ. 2 லட்சத்தை வாலி சம்பளமாக பெற்றதாக நெல்லை ஜெயந்தா தெரிவித்துள்ளார். அதிலும், ஒரு லட்ச ரூபாயை காசோலையாக மட்டுமே கொடுக்க வேண்டுமென தயாரிப்பாளர்களிடம் வாலி சொல்லி விடுவாராம்.
அவ்வாறு காசோலையாக பெறப்பட்ட தொகையை தனது மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து, அதன் வட்டியை அத்தியாவசிய தேவைகளுக்கு செலவளிக்க வேண்டுமென்ற கொள்கையுடன் வாலி வாழ்ந்ததாக நெல்லை ஜெயந்தா கூறியுள்ளார். தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் சொத்துகள் வாங்கி குவிக்க வேண்டுமென்ற பழக்கம் இருக்கும் மனிதர்களிடையே, வாலி மட்டுமே இவ்வாறு மாற்றுக் கருத்துடன் இருந்ததாக நெல்லை ஜெயந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், வாலியின் இந்த கண்டிஷனால் சில பெரிய நிறுவனங்களுக்கு அவர் பாடல்கள் எழுதவில்லை எனவும் நெல்லை ஜெயந்தா நினைவு கூர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“