scorecardresearch

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நெல்லை தங்கராஜ்  திடீர் மரணம்!   

பரியேறும் பெருமாள் படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்த நெல்லை கனகராஜ் உடல்நலக் குறைவால் இன்று மரணமடைந்தார்.

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நெல்லை தங்கராஜ்  திடீர் மரணம்!   

பரியேறும் பெருமாள் படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்த  நெல்லை கனகராஜ்  உடல்நலக்  குறைவால்  இன்று மரணமடைந்தார்.

2018-ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படம், நல்ல வரவேற்பை பெற்றது.  திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வை படம் பேசியது.

இந்த படம் எதிர்பாத்ததைவிட பலரால் பாரட்டப்பட்டது.  இந்த படத்தில் நாயகன் பரியனுக்கு அப்பாவாகவும் தெருகூத்து கலைஞனாகவும்  நடித்திருப்பார் தங்கராஜ் .

அவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. மேலும் அவர் ஏழமையான நிலையில் நெல்லையில் குடிசை விட்டில்தான் வசித்து வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் இன்று காலை  5 மணிக்கு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இறங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Nellai thangaraj sudden death pariyerum perumal