பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர் 2' படத்தை இயக்க வேலை செய்து வருகிறார். ஜெயிலர் 2 படத்தில், ரஜினியுடன் நடிகர் தனுஷை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரின் கேமியோ கதாபாத்திரங்கள் ஜெயிலர் 2 படத்திலும் மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு குணமடைந்ததைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' முடித்த பிறகு இந்தத் திட்டம் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் திலீப்குமார் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ரஜினியை வைத்து 'ஜெயிலர் 2' படத்தை இயக்க வேலை செய்து வருகிறார். ஜெயிலர் 2 படம் குறித்து இயக்குநர் நெல்சன் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், இந்தியாகிளிட்ஸ் தமிழின் லேட்டஸ்ட் ரிப்போர்ட் படி, நடிகர் தனுஷை ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதற்கு கொண்டுவர நெல்சன் முயற்சி செய்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.
'ஜெயிலர்' திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கேமியோ பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜெயிலர் 2 படத்தில் அவர்களை தொடர்சியாகக் கொண்டுவர நெல்சன் திலீப்குமார் வர திட்டமிட்டுள்ளார். மேலும், 'ஜெயிலர் 2' படத்தில் நெல்சன் திலீப்குமார், நடிகர் தனுஷுக்காக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார் என்றும் இதற்கு நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து ஒப்புதல் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இணைந்து நடிக்க உள்ளனர் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், ரஜினி - தனுஷ் சேர்ந்து நடிப்பதை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இருப்பினும், தனுஷ் தனது பிஸியான ஷெட்யூலுக்கு மத்தியில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பிற்கான தேதியை அளிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் வேலை முடித்ததும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் 'கூலி' படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அவர் விரைவில் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“