nenjam undu nermai undu odu raja, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் ரியோ நடிக்கும் படத்திற்கு நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Advertisment
சமீபத்தில் வெளியாகி யூடியூப்-ல் நீண்ட நாள் டிரெண்டிங்கில் இருந்த டிரெய்லர் சூப்பர் சீலக்ஸ். இந்த படத்தின் டீசரில் விஜய் சேதுபதி பேசியிருக்கும் வசனம் அனைவரையும் கவர்ந்தது. பின்னர் அந்த ஸ்டைலை அவர் சிந்துபாத் படத்திற்கும் பிரயோகித்தது ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டியது.
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் நடிகர் ரியோவின் படத்தின் பெயரை வீடியோ டீசராக அறிவித்திருக்கிறார்கள். அதில் விஜய் சேதுபதியின் ட்ரைலர் வசனங்களை காபி அடித்து பட்டி டிங்கரிங் பார்த்து தங்களது படத்தின் டைட்டில் அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு வீடியோவை சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் ரசித்து வந்தாலும், பலருக்கும் ‘இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா’ என்று தோன்றும் அளவிற்கு பொறுமையை சோதிக்கிறது இந்த டிரெய்லர் டிரெண்டு.