அஜித் சாருடன் வேலை செய்யும் அடுத்தப் படமும் குவாலிட்டியாக இருக்கும் – ஹெச்.வினோத்!

பிங்க் ரீமேக் நல்ல சந்தர்ப்பமா இருக்கும்

Ner Konda Paarvai 2nd single edm song
Ner Konda Paarvai

நேற்று வெளியான ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது.

பாலிவுட்டில் வெளியான ’பிங்க்’ படத்தின் ரீமேக்கான இதனை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். நடிகர் அஜித் ஹீரோவாக நடித்துள்ளார்.

5.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கும் இந்த ட்ரைலர், யூ ட்யூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் பிரபல ஊடகத்தின் நேர்க்காணலில் கலந்துக் கொண்ட ஹெச்.வினோத் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

‘நானே என்னோட படங்கள்ல பொண்ணுங்கள டீஸ் பண்ணிருக்கேன். அந்த தப்ப இனி சரி பண்ணிக்கனும். அதுக்கு பிங்க் ரீமேக் நல்ல சந்தர்ப்பமா இருக்கும்’ என அஜித் சார் என்னிடம் கூறினார்.

”இதனை பெண் இயக்குநர்களை வைத்து ரீமேக் செய்யலாம் என்ற போது, வேண்டாம் அப்படி செய்தால் படத்தின் கருத்து ஒருநிலை சார்பாக இருக்கும். இந்தப் படம் பென்களை விட, ஆண்கள் தான் முக்கியமாக பார்க்க வேண்டிய படம்”, என அஜித் கூறியதாக குறிப்பிட்ட வினோத், ’அஜித் சாருடன் நான் வேலை செய்யப்போகும் அடுத்தப் படம் குவாலிட்டியான ஆக்‌ஷன் ஃபிலிமாக இருக்கும்’ என உறுதிப்படுத்தினார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ner konda paaarvai ajith h vinoth

Next Story
Happy Birthday GV Prakash: மெலடிகளை அதிகம் ரசிக்க வைத்தவர்!Happy Birthday GV Prakash
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com