Advertisment

Ner Konda Paarvai Box Office Collection: சென்னை முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Ner Konda Paarvai vs Tamilrockers: நேர்கொண்ட பார்வை திரைப்படம் கலெக்‌ஷன் நிலவரம் தொடர்பான தகவல்களை இங்கு காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ner Konda Paarvai Box Office Collection: சென்னை முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Ner Konda Paarvai Box Office Collection not affected by Tamilrockers: அஜீத் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் கலெக்‌ஷன் நிலவரம் தொடர்பான தகவல்களை இங்கு காணலாம். இதற்கிடையே படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட்டது. அதையும் தாண்டி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டமும், வசூலும் குறையவில்லை.

Advertisment

அஜீத், ஷ்ரதா ஸ்ரீநாத், வித்யா பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம், நேர்கொண்ட பார்வை. தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக வந்து வசூலில் விஸ்வாசம் படம் அசத்தியதால், அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் நாள் (வியாழக்கிழமை) வசூல் குறித்து தமிழ்நாடு தியேட்டர் அசோசியேஷன் @TN_Theatres டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. ‘திருவிழா, விடுமுறை அல்லாத நாளில் தல அஜீத் சாரின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி சென்னை சிட்டியில் 1.58 கோடி கலெக்‌ஷன் செய்திருக்கிறது. படத்தின் உள்ளிருப்புதான் கிங். வெள்ளிக்கிழமை அனைத்து செண்டர்களிலும் செம ரஷ்’ என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சினிமா விமர்சகர் ரமேஷ்பாலா, ‘வேலை நாளில் சென்னை சிட்டியில் முதல் நாள் 1.58 கோடி வசூல் செய்திருப்பது பெரிய சாதனை’ என குறிப்பிட்டிருக்கிறார். காலைக் காட்சிகளில் ரசிகர்கள் ஆரவாரமும், மாலைக் காட்சிகளில் ஃபேமிலி ஆடியன்ஸும் திரள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

தமிழகம் தழுவிய அளவில் முதல் நாள் வசூல் 26.3 கோடி ரூபாய் என அஜித் ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள். 700 தியேட்டர்களில் 3700 ஸ்க்ரீன்களில் படம் வெளியானதாகவும், 98 சதவிகித காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாக போய்க் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட்டது. அதையும் தாண்டி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டமும், வசூலும் குறையவில்லை.

 

 

Ajith Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment