TamilRockers Leaked Ner Konda Paarvai Scenes: அஜீத் நடிப்பில் தயாராகியிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை ஆன் லைனில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதையும் மீறி படத்தின் சில காட்சிகளை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது. ஆகஸ்ட் 8-ம் தேதி படம் வெளியான நிலையில் முழுப் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிடும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.
நேர்கொண்ட பார்வை படம், ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியானது. அஜீத் ஜோடியாக வித்யா பாலன் இதில் நடித்திருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். இந்தியில் வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் மொழி மாற்றம் இது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/Ajith-300x217.jpg)
Tamilrockers vs Ner Konda Paarvai Tamil Movie: Madras High Court Order
செவ்வாய்க்கிழமை இந்தப் படத்தின் பிரிவியூ காட்சி சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள், படம் அஜீத்தின் நடிப்புக்கு செமையாக தீனி போட்டிருப்பதாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். அஜீத்தின் திரையுலக வாழ்வில் இந்தப் படம் திருப்புமுனை என்றும் ட்விட்டர் விமர்சனங்கள் வந்திருக்கின்றன.
Nerkonda paarvai review : அஜித் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய மைல்கல்! நேர்கொண்ட பார்வை விமர்சனம்.
இந்தச் சூழலில் நேர்கொண்ட பார்வை படத்தை திருட்டுத்தனமாக ஆன் லைனில் வெளியிட தடை கோரி தயாரிப்பு நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நேர்கொண்ட பார்வை படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட அனைத்து பைரசி வெப்சைட்களுக்கும் இது பொருந்தும். கடந்த காலங்களில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், சில படங்களை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அது போல் அல்லாமல் அரசு நிர்வாகங்கள் உரிய கண்காணிப்பை செய்ய வேண்டும் என படக் குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.
இதற்கிடையே பிரிவியூ வெளியான நிலையிலேயே படத்தின் முக்கிய காட்சிகளை தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டது. எனவே ஆகஸ்ட் 8-ம் தேதி தியேட்டர்களில் படம் வெளியான நிலையில் தமிழ் ராக்கர்ஸின் மிரட்டல் அதிகரித்திருக்கிறது.