/tamil-ie/media/media_files/uploads/2019/06/Ner-Konda-Paarvai-Trailer-Ajith-kumar-movie.jpg)
Tamil Nadu news today in tamil,
Thala Ajith's Nerkonda Paarvai Trailer: ’விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘நேர் கொண்ட பார்வை’.
இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் இதனை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.
Nerkonda Paarvai Trailer Released with big expectations
இந்தியில் அமிதாப் பச்சன் முதன்மையான வேடம் ஏற்று, வழக்கறிஞராக நடித்திருந்தார். தமிழில் அந்த வேடத்தில் அஜித் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
Wait is over #NerKondaPaarvaiTrailer will be releasing today 6pm via @zeemusiccompany#AjithKumar#HVinoth#BayViewProjects@ZeeStudios_@SureshChandraa@ShraddhaSrinath@thisisysr@nirav_dop@dhilipaction@nerkondapaarvai@zeemusicsouth@ProRekha@DoneChannel1@RangarajPandeyRpic.twitter.com/47B8wnWFMQ
— Boney Kapoor (@BoneyKapoor) 12 June 2019
நேர் கொண்ட பார்வை படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருக்கிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட படக்குழு, நேர் கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியாவதாக ட்விட்டரில் அறிவித்திருந்தார் போனி கபூர். இதைத் தொடர்ந்து தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.