டிரெண்டாகும் நேர் கொண்ட பார்வை படத்தின் ‘வானின் இருள்’ பாடல்!

கவிஞர் உமாதேவி எழுதியிருக்கும் இந்தப் பாடலை ‘ரவுடி பேபி’ புகழ் தீ பாடியிருக்கிறார். 

Ner Konda Paarvai, Vaanin Irul, Thala Ajith

Ner Konda Paarvai First Single: ’விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் அஜித் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘நேர் கொண்ட பார்வை’.

பாலிவுட்டில் 2016-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் தான் இது. இந்தியில் நடிகர் அமிதாப் பச்சனும், நடிகை டாப்ஸியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

‘நேர் கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் ஆகலையாம்!

தற்போது ’பிங்க்’ படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.  இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

இதனை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் போனி கபூர், ஸி ஸ்டூடியோவுடன் இணைந்துத் தயாரித்திருக்கிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

நேர் கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே ரிலீஸ் செய்ய, படக்குழுவினர் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘வானின் இருள்’ எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. கவிஞர் உமாதேவி எழுதியிருக்கும் இந்தப் பாடலை ‘ரவுடி பேபி’ புகழ் தீ பாடியிருக்கிறார்.

இன்று காலை 7.45-க்கு போனி கபூர் வெளியிட்ட இந்தப் பாடலை டிரெண்ட் செய்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

Web Title: Ner konda paarvai vaanin irul ajith yuvan shankar raja

Next Story
Bigg boss tamil 3 today promo: பிக்பாஸ் முதல்வாரமே கதறி அழும் வாரம் போலயே!!! யப்பா டேய் முடியல….Bigg Boss Tamil 3, bigg boss tamil 3 contestants images, bigg boss tamil promo 3 today episode, abirami bigg boss, Star Vijay, Kamal Haasan, sakshi agarwal, tharshan thiyagarajah, bigboss 3 contestent, reshma pasupuleti, abirami venkatachalam, losliya
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express