/tamil-ie/media/media_files/uploads/2019/08/a3.jpg)
nerkonda paaarvai ajith fan try to fire bath - நேர்கொண்ட பார்வை படத்துக்கு டிக்கெட் இல்லையாம்! தீக்குளிக்க முயன்ற அஜித் ரசிகர்
நேர்கொண்ட பார்வை படத்திற்கு டிக்கெட் கிடைக்காத விரக்தியில் அஜித் ரசிகர் ஒருவர் தியேட்டர் வாசலில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்,வித்யாபாலன், ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை சத்யம், காசி, ரோகினி உள்ளிட்ட தியேட்டர்களில் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது.
மேலும் படிக்க - 18 வருடங்களுக்கு முன்பு கிண்டல் செய்யப்பட்ட அஜித்... இன்று வட்டியும் முதலுமாய் பதிலடி! - நேர்கொண்ட பார்வை விமர்சனம்
படம் பார்க்க ஏராளமான அஜித் ரசிகர்கள் இரவு முதலே தியேட்டர் வாசலில் காத்திருக்க தொடங்கினர். பெரும்பாலான தியேட்டர்களில் அதிகாலை காட்சிக்கு நேற்று இரவு தான் முன்பதிவு தொடங்கியது. இதனால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இந்நிலையில், டிக்கெட் கிடைக்காத விரக்தியில், சென்னை சத்யம் தியேட்டரின் முன் ரசிகர் ஒரு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த சம்பவம் குறித்து நடிகர் சாந்தனு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
I DONT KNW WAT TO SAY!
At #Sathyam now where a man RIGHT NXT TO ME was bathing in petrol&searching fr a matchstick to burn himself bcz of sme ticket issue for #NKP#THALA or any othr STAR will def not encourage this!
It’s ur life against a movie ticket
Police have arrested him nw
— Shanthnu Buddy (@imKBRshanthnu) August 7, 2019
இன்று ரிலீசான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.