’நேர்க்கொண்ட பார்வை’ வெளியாவதற்கு முன்பே 100 கோடி சம்பாதித்த போனி கபூர்!

இப்படம் சீனாவில் 100 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.

இப்படம் சீனாவில் 100 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nerkonda parvai நேர்கொண்ட பார்வை

nerkonda parvai நேர்கொண்ட பார்வை

Nerkonda Paarvai: நடிகர் அஜித் தற்போது நேர்க்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

Advertisment

இதனை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

இதில் வித்யா பாலன், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காக நேர்க்கொண்ட பார்வை உருவாகியிருக்கிறது.

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இதனை தயாரித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே உருவாகியிருக்கும் இப்படம், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது.

Advertisment
Advertisements

இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே 100 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் போனி கபூர். ஆனால் நேர்க்கொண்ட பார்வை படம் மூலமாக அல்ல.

ஸ்ரீதேவியின் கடைசிப் படமான ‘மாம்’ சமீபத்தில் சீனாவில் வெளியாகியுள்ளது. அவரின் 300-வது படமான இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் சீனாவில் 100 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. இந்தத் தகவலை போனி கபூர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தவிர, நேர்க்கொண்ட பார்வை திரைப்படத்தையும் சீனாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Tamil Cinema Ajith Boney Kapoor

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: