Nerkonda Paarvai Movie Release and Review: அஜீத் நடிப்பில் இன்று வெளியான நேர்கொண்ட பார்வை குறித்த விமர்சனங்கள் இங்கு தொகுத்து தரப்படுகிறது. முதல்கட்ட தகவல்படி, அஜித் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. படம், ‘சூப்பர் டூப்பர் ஹிட்’ என கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.
நடிகர் அஜீத் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் 2-வது படம், நேர்கொண்ட பார்வை. ஏற்கனவே பொங்கல் ரிலீஸாக ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக வெளியான விஸ்வாசம், வசூலில் பட்டையைக் கிளப்பியது. நேர்கொண்ட பார்வையும் அந்த வரிசையில் வசூலை குவிக்கும் படமாகவே பார்க்கப்படுகிறது.
Nerkonda Paarvai critic review: 2016-ல் வெளியான இந்தி படமான பிங்க் படத்தின் அதிகாரபூர்வ தமிழ் தழுவல் நேர்கொண்ட பார்வை. மறைந்த ஸ்ரீதேவியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் பட நிறுவனத்திற்கு இந்தப் படத்தை நடித்துக் கொடுத்திருக்கிறார் அஜீத்.
தனது மனைவியின் கனவை நிறைவேற்றிவிட்டதாக செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் பிரிமியர் ஷோ வெளியிட்டதும் நெகிழ்வுடன் டிவிட்டரில் பதிவு செய்தார் போனி கபூர். தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத்துக்கு இது 2-வது படம்.
Web Title:Nerkonda paarvai review ajith nerkonda paarvai tamil movie ratings
வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், ‘இந்த நேரத்திற்கு தேவையான படம் இது. அஜித் சார் இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்ததற்காக மகிழ்கிறேன். ஒவ்வொருவரும் இந்தப் படத்தில் இருந்து பாடம் பெறுவார்கள் என நம்புகிறேன். மொத்த படக் குழுவினருக்கும் வாழ்த்துகள். இது நம் சமூகத்தை சிறிதாவது மாற்றும்’ என கூறியிருக்கிறார்.
நடிகர் விக்ரம் பிரபு கூறுகையில், ‘நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு வாழ்த்துகள். இந்த காலகட்டத்தில் தேவையான கதையம்சம் உள்ள படம் இது’ என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில், ‘நேர்கொண்ட பார்வை படத்தின் பெரிய வெற்றிக்காக தல அஜீத் சார், இயக்குனர் வினோத், போனி கபூர், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருக்கு வாழ்த்துகள்’ என கூறியிருக்கிறார்.
படத்தின் நாயகி ஷ்ரதா ஸ்ரீநாத், இந்தப் படம் தங்கள் வாழ்வில் முக்கிய மாற்றங்களை உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். இதற்காக இயக்குனர் வினோத், நடிகர் அஜீத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் படக் குழுவினருக்கு மிகவும் உணர்வு பூர்வமாக நன்றி கூறியிருக்கிறார் அவர்.
நடிகர் சித்தார்த் கூறுகையில், ‘நேர்கொண்ட பார்வையின் பிரமாண்ட வெற்றிக்கு வாழ்த்துகள். இது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம், பெரிய நடிகர்களிடம் இருந்து வருவது நல்ல விஷயம். இந்தப் படத்தை அஜீத் தேர்வு செய்தது சிறப்பானது’ என கூறியிருக்கிறார்.
நடிகர் அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அஜித் சாருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் மொத்த டீமுக்கும் கிடைத்த வெற்றி’ என குறிப்பிட்டிருக்கிறார்.