scorecardresearch

Nerkonda paarvai review : அஜித் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய மைல்கல்! நேர்கொண்ட பார்வை விமர்சனம்.

Thala ajith Nerkonda paarvai review : அஜித் இல்லாமல் சாத்தியமே இல்லை

Nerkonda paarvai box office collection
இந்தியில் வெளியான ’பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இதனை, ஹெச். வினோத் இயக்கியிருந்தார். முன்னணி கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். ஜி ஸ்டூடியோஸுடன் இணைந்து போனி கபூர் தயாரித்திருந்த இந்தப் படத்தை, எஸ்.பிக்சர்ஸும், கந்தசாமி ஆர்ட்ஸும் வெளியிட்டன.

Nerkonda paarvai movie review : நேர்கொண்ட பார்வை படத்தின் விமர்சனத்தை ஒரு வரியில் சொல்லி முடிக்க வேண்டும் என்றால் பல ஆண்டுகள் கழித்து அஜித்தின் ஒட்டு மொத்த நடிப்பு திறமைக்கும் தீணிப்போட்டு இருக்கிறது இந்த திரைப்படம். ஏற்கனவே சூப்பர் டூப்பட் ஹிட் அடித்த படத்தை மிக தைரியமாக கையில் எடுத்து அதில் புரட்சி புதுமை என்ற பெயரில் எதையும் செய்யாமல் அப்படியே ஆனால் அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் மாஸாக திரையில் விருந்து அளித்திருக்கிறார் இயக்குனர் எச். வினோத்.

சிங்கப்பூரில் வெளியான் நேர்கொண்ட பார்வை : NerKonda Paarvai Premier Show!

இந்தியில் அமிதாப், டாப்ஸி நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் பரபரப்பை கிளப்பிய படம் “பிங்க்” அந்தப்படத்தின் தமிழ் ரிமேக்காக உருவாகியுள்ள படம் தான் “நேர் கொண்ட பார்வை”.இந்த படத்தை தயாரித்து வெளியிடுகிறார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட் பிரபலம் போனி கபூர். படத்தின் பூஜை தொடங்கியதில் இருந்து போனி கபூர் அஜித் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் சிங்கபூரில் ஆகஸ்ட்(இன்று) 6 ஆம் தேதி காலை 9 மணிக்கு நேர்கொண்ட பார்வை பீரிமியர் ஷோ வெளியாகும் என கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்சியை பகிர்ந்தார்.

அவர் கூறியது போலவே, படத்தின் முதல் பீரிமியர் ஷோ இன்று சிங்கப்பூரில் வெளியாகியது. இதில் கலந்துக் கொண்ட பலரும் படத்தை பார்த்து சமூகவலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அனைத்து தரப்பில் இருந்தும் படத்திற்கு மிகப் பெரிய பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அஜித் மற்றும் வினோத் கூட்டணி குறித்து சினிமா விமர்சகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றன. அதுமட்டுமில்லை ரீமேக் படமாக இருந்தாலும் வினோத் நேர்கொண்ட பார்வையில் ஏதோ ஒரு மாயத்தை செய்துள்ளார் என்றும் அது அஜித் இல்லாமல் சாத்தியமே இல்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். படத்தை பார்த்த அனைவரும் அஜித் ரசிகர்களுக்காக வைக்கப்பட்ட ஒரு சண்டைக் காட்சியை முக்கியமாக பதிவிடுகிறார்கள்.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் நடிப்பிற்கு மிகச் சரியான படமாக நேர்கொண்ட பார்வை அமைந்துள்ளது என்பதே படம் பார்த்த அனைவரின் கருத்து. நீங்களே விமர்சனங்களை பாருங்கள்.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாக இருக்கும் நேர்கொண்ட பார்வைக்காக அஜித் ரசிகர்கள் வெயிட்டிங்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Nerkonda paarvai review nerkonda paarvai movie review nerkonda paarvai world premiere thala ajith director vinoth