/indian-express-tamil/media/media_files/2025/09/19/pugazh-2025-09-19-11-47-56.jpg)
இப்படி விளம்பரம் செஞ்சு தான் ஒருத்தர் மரணம்: விஜய் டி.வி புகழை சாடும் நெட்டிசன்கள்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு காமெடியில் கலக்கியவர் நடிகர் புகழ். தொடர்ந்து, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து கலக்கி வருகிறார்.
சிரிஷ்டி, சிரின், பவித்ரா லட்சுமி போன்ற நடிகைகளுடன் இணைந்து சமைத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். சொல்லப்போனால் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பிரபலமாக புகழ் ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளார்.
இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித் திரையிலும் கலக்கி வருகிறார். சிக்ஸர், கைதி, காக்டெயில், சபாபதி, வலிமை போன்ற படங்களில் நடித்தார். பின்னர், ஆகஸ்ட் 16 1947 படத்தில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டினார்.
'என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் முழு நீள காமெடியனாக வலம் வந்தார். தொடர்ந்து, ‘மிஸ்டர் ஜு கீப்பர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நடிகர் புகழ் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்துள்ளார்.
இப்படி திரைத்துறையில் பல திறமைகளை வெளிப்படுத்தி வரும் நடிகர் புகழ் தனது காதலியான பென்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அண்மையில் இந்த குழந்தை சாதனை படைத்திருப்பதாக புகழ் அறிவித்திருந்தார்.
திரைத்துறையில் எப்படி வளர்வது என்று சிந்தித்து வரும் புகழ் தற்போது விளம்பரம் ஒன்றினால் பிரச்சனையில் சிக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வீடியோவில், “ நீங்கள் மது பழக்கம் உள்ளவரா? இந்த பதிவு உங்களுக்கு தான். நம்ம லிவர் 45 எம்.எல் ஆல்ஹகாலை வெளியேற்றுவதற்கு ஒரு மணிநேரம் எடுத்துக் கொள்கிறது. அப்போது அதிக்கப்படியாக குடித்தால் உங்க லிவர் எவ்வளவு பாதிக்கப்படும் தெரியுமா.
பொதுவாக, மது அருந்தினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இப்படி பாதிக்கப்படும் கல்லீரலை சரி செய்ய பூஸ்லீ பவுடரை பயன்படுத்துங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை ஷேர் செய்யும் நெட்டிசன்கள் இப்படி விளம்பரம் செஞ்சு தான் ஒருத்தர் இறந்துவிட்டார் என்று நடிகர் ரோபோ சங்கரை மேற்கோள் காட்டி விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ரோபோ சங்கர், கல்லீரல் பிரச்சனைக்கு மூலிகை தண்ணீர் பருகுமாறு விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது.
இப்படி விளம்பரம் பன்னி தான் ஒருத்தர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்காரு... பணம் வருதேனு இந்த மாதிரி Sensitive Product க்கு விளம்பரம் தேடாதிங்க pic.twitter.com/dnGZV6vTLX
— Dr சித்தப்பு 🙈🙉🙊 (@VinodhRavi4) September 18, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.