Archana – Zara Instagram Post Tamil news : ஸ்டார் விஜயின் பிக் பாஸ் சீசன் தொடங்கிவிட்டாலே தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பெரும்பாலான மக்களுக்கு என்டெர்டெயின்மென்ட்டுக்கு குறைவிருக்காது. அதிலும் அரசியலில் காலடி பதித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால், ஏராளமான எதிர்பார்ப்புகளும் தோற்றுக்கொண்டன. மூன்று சீசன்களை வெற்றிகரமாகக் கடந்து தற்போது நான்காவது சீசன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு இந்த சீசனில் வரம்பு மீறல்கள் அதிகம் என்றபோதிலும், கமல் மௌனம் சாதிப்பது மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அதிக எதிர்பார்ப்பில் களமிறங்கிய தொகுப்பாளர் அர்ச்சனாவின் எவிக்ஷன்தான் தற்போதைய வலைதள டாப்பிக்காக உள்ளது.
எப்போதும் ‘அன்பு ஜெயிக்கும் அன்பு ஜெயிக்கும்’ என்று பிக் பாஸ் வீட்டிற்குள் முழங்கிக்கொண்டிருந்த அர்ச்சனா, கடந்த வாரம் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். இந்தச் செய்தியை அர்ச்சனாவின் டீனேஜ் மகள் ஜாரா வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு நெட்டிசன்களின் பதில்கள் யாவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கின்றன.
கடந்த எழுபது நாட்களாக ஜாரா தன் தாயை மிகவும் மிஸ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் ‘தங்லிஷில்’ தரக்குறைவான போஸ்டுகளை பகிர்ந்துள்ளனர். “இந்த ஞாயிற்றுக்கிழமை உன் அம்மா வெளியேற்றப்படுவார். எனவே, இனி அம்மாவை மிஸ் செய்யப்போவதில்லை”, “அன்பு வெல்லும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இந்த கேள்விக்கு பதிலளிக்க உங்கள் தாயிடம் கேளுங்கள்”, “கடவுள் இருக்கிறார் குமாரு” உள்ளிட்ட கமென்ட்டுகளை பதிவிட்டுள்ளனர் வலைதளவாசிகள்.


தன் தாயின் அதிருப்தி செயல்திறனுக்கு பதின்பருவ மகளைத் தாக்குவது சரியான முறை அல்ல. அதிலும், பிக் பாஸ் போன்ற முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக வளரும் சிறுவர்/சிறுமிகளை கடும் சொற்களால் தாக்குவது முறையற்றது. இதனை நெட்டிசன்கள் புரிந்துகொள்வார்களா!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”