/tamil-ie/media/media_files/uploads/2019/03/Isha-Koppikar.jpg)
Isha Koppikar, இஷா கோபிகர்
அரவிந்த் சாமி, விஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல முன்னாள் தமிழ் நடிகை இஷா கோபிகர், அஜித்தை பற்றி கூறிய கருத்து ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் தனது வெற்றியை மட்டும் பதித்து, ரசிகர்கள் மத்தியில் தனக்கென என்றும் அழியாத இடம் பிடித்த முன்னணி நடிகையாக விளங்கியவர் இஷா கோபிகர். 90-களில் தமிழில் கொடிக்கட்டி பறந்த முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடத்த இவர் 20-யில் கோலிவுட்டிலிருந்து காணாமலேயே போனார்.
இஷா கோபிகர் பேட்டி
பின்னர் 18 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் ‘ரீ-எண்ட்ரி’ கொடுக்கத் தயாராகியுள்ளார் இஷா. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அறிவியல் சார்ந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளர்.
இந்நிலையில் அவரளித்த பேட்டி ஒன்றில், “சிவகார்த்திகேயன் பார்க்கும் போது எனக்கு ரஜினி தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அவரின் முகம், கண், மூடி, நிறம் ஏதோ ஒன்று எனக்கு ரஜினியை நினைவு படுத்துகிறது.” என கூறினார்.
அதுமட்டுமின்றி, “எனக்கு அஜித்தை பிடிக்கும் ஆனால் அவர் சினிமாவில் நடிக்கிறாரா? என தெரியவில்லை.”என்று கூறினார்.
தமிழகத்தில் யாராலும் அசைக்க முடியாத மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் அஜித். அவரை பற்றி இவர் இப்படி குறியது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது அறியாமையை காட்டுகிறது என அஜித் ரசிகர்கள் இஷாவை சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.