Advertisment

மணிமேகலை விலகலுக்கு பிரியங்கா தான் காரணமா? வீடியோ பதிவில் நெட்டிசன்கள் பதில்

இந்த சீசனில் குக்காக வந்த ஒரு பெண் அவர் வேலையை மறந்து ஆங்கர் போல் செயல்படுகிறார். சுயமரியாதையை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் மணிமேகலை பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Priya MANIM


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். முதல் முதலில் 2019-ல் தொடங்கிய இந்த நிகழ்ச்சி மக்கள் ஆதரவு பெற்று தற்போது வரை அடுத்தடுத்த சீசன்களாக ஒளிபரப்பபட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் முதலில்  கோமாளியாக களமிறங்கிய மணிமேகலை இந்த சீசனில் ரக்ஷனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதையடுத்து நேற்று திடீரென தான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக மணிமேகலை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். அதில், ,  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் இல்லை. மிகுந்த, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நான் எப்பொழுதும் எனது 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் கொடுக்கிறேன். ஆனால் சுய மரியாதையை விட முக்கியமானது எதுவுமில்லை. 

இந்த சீசனில் குக்காக வந்த ஒரு பெண் அவர் வேலையை மறந்து ஆங்கர் போல் செயல்படுகிறார். என்னை வேலையைச் செய்ய விடாமல் ஆங்கர் வேலையில் நிறைய குறுக்கிடுகிறார். சுயமரியாதையை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். 

இந்தநிலையில் மணிமேகலை குறிப்பிடுவது பிரியங்கா தேஷ்பாண்டேவை தான் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். விஜய் டி.வியின் பிரபல தொகுப்பாளரான பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் குக்காக உள்ளார். பிரியங்கா, மணிமேகலையின் ஆங்கரிங் வேலையில் குறுக்கிடுவது போன்ற சில வீடியோக்களையும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

இப்போதாவது இவராவது  பிரியங்காவின் ஆதிக்க செயல் குறித்து தைரியமாக வெளியில்  சொல்லி உள்ளார். அவர் இவ்வளவு நாள் எவ்வளவு துன்பம் அடைந்திருப்பார். மணிமேகலை வெளியேறுவது நல்லது. முதல் இருந்தே பிரியங்கா- இர்பான் அக்கா தம்பி நாடகம் நடத்தியது நன்றாக இல்லை  என்று ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் ஒரு பயனர், இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது ஆனால் சமீபத்தில் நடந்த விஜய் தொலைக்காட்சி விருது நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளினியாக 
பிரியங்கா விருது வாங்கிய பின் இது தீவிரமடைந்தாக கூறினார். இது மணிமேகலையின் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மணிமேகலைக்கு சேனலில் இருந்தும் அதிக நிகழ்ச்சிகள் கொடுக்கப்படாமல் இருந்துள்ளது என்றும் கூறினார். 

அதோடு பிரியங்கா Judge ஆக வரும் செஃப் தாமுவிடமும் ஏதோ கேள்வி எழுப்பி கேட்கிறார். இதுவும் சற்று ஆதிக்கம் செலுத்துவது போல் தெரிகிறது. அதற்கு செஃப் தாமு இது ஸ்டார் மியூசிக் இல்லை, இது குக்வித் கோமாளி நிகழ்ச்சி என்று கூறுகிறார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment