Advertisment

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி வீடியோவைப் பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான்; நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சென்னை இசை நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததையடுத்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
dd

ஏ.ஆர். ரஹ்மான் சென்னை இசை நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் வீடியோவை பகிர்ந்ததையடுத்து நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

சென்னையில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குளறுபடி ஏற்பட்டு சர்ச்சையான நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் அந்த இசை நிகழ்ச்சியின் வீடியோவைப் பகிர்ந்ததையடுத்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisment

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏ.சி.டி.சி ஈவண்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சிக்கு 20 ஆயிரம் பார்வையாளர்களுக்கு அனுமதி பெற்று விட்டு கூடுதலாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாலும், டிக்கெட் வாங்காதவர்களும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு வந்ததால், கூட்ட நெரிசலும் அந்த பகுதி சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சில விரும்பத் தகாத நிகழ்வுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி விமர்சனங்களை எதிர்கொண்டது.

இதற்கு ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ.சி.டி.சி ஈவன்ஸ் நிறுவனத்தின் தவறான நிர்வாகமே காரணம் என்று பலரும் குற்றம் சாட்டினர். ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் கூட்டத்தை சரியாக நிர்வகிக்காததற்காக 3 காவல்துறை அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்தது.

இசை நிகழ்ச்சி முடிந்ததும், நடந்த குளறுபடிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மன்னிப்புக் கோரினர். மேலும், “சென்னை மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு நன்றி.” தெரிவித்தனர். மேலும், இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியும் இசை நிகழ்ச்சிக்கு வரமுடியாதவர்களுக்கு டிக்கெட்டுக்கான தொகையை திரும்பத் தருவதாக ஏ.சி.டி.சி நிறுவனம் அறிவித்தது.

மேலும், “சார் அபாரமான வரவேற்பும், பெருந்திரளான கூட்டமும் நம்முடைய இசை நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்தது. கூட்ட நெரிசல் காரணமாக கலந்து கொள்ள முடியாதவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், குளறுபடிகளுக்கு நாங்கள் முழுப் பொறுப்பு ஏற்கிறோம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.  #மறக்குமா நெஞ்சம்” என்று ஏ.சி.டி.சி நிறுவனம் கூறியது.

ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகான டிக்கெட்டுகள் வைத்திருந்தும், கூட்ட நெரிசல் காரணமாக இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கிற்குள் நுழைய முடியாததால் இது ஒரு மோசடி என்று பலர் அழைத்தனர். ஆனால், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமூக ஊடகங்களில் ரசிகர்களின் நஷ்டத்தை ஏற்பதாகவும் டிக்கெட் தொகையைக்கூட திருப்பித் தருவதாகவும் கூறினார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து நடவடிக்கை எடுக்காத ஐ.பி.எஸ் அதிகாரி உட்பட 3 காவல்துறை அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற்ற  ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் வீடியோவை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு தாக்கி வருகின்றனர். இதையடுத்து, கம்மெண்ட்டுகள் பதிவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வீடியோ குறித்து சில நெட்டிசன்கள் ஏ.ஆர்.ரஹ்மானை உணர்ச்சியற்றவர் என்று சாடியுள்ளனர். சிலர்,  அவரை பன்பில்லாதவர் என்றும் கடுமையாக விமர்சித்து சாடி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ar Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment