Netizens trolled roja serial because of this particular scene
சன் டிவி-யில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் டிஆர்பி-இல் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.
Advertisment
பல ஆண்டுகளாக காணாமல் போன ரோஜாவின் தாய் செண்பகம், மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்துவிட்டார். தலையில் அடிபட்டு பழைய நியாபகங்கள் மீண்டும் வர, ரோஜா தான் தன்னுடைய உண்மையான மகள் என செண்பகம் தெரிந்துகொள்கிறாள்.
இதற்கு நடுவில் ஷாக்ஷியும், அனுவும் சேர்ந்து கொண்டு, ரோஜாவை பழி வாங்க பலத் திட்டங்களை தீட்டி, கடைசி அந்த வலையில் அவர்களே சிக்கிவிடுகின்றனர்.
அனு, ஷாக்ஷி உடன் கூட்டணி சேர்ந்து, மாணிக்கம் மற்றும் அன்னபூரனியின் சொத்துக்களை ஒட்டுமொத்தமாக கைப்பற்ற, உண்மையான வாரிசாக அனைவரையும் நம்பவைக்க நாடகமாடுகிறாள்.
Advertisment
Advertisements
இதனால் அனுதான் உண்மையான பேத்தி என நம்பி, ரோஜாவை கொடுமைகள் செய்த பாட்டி அன்னபூரணியும் இப்போது மனம்மாறி ரோஜா தான் செண்பகத்தின் உண்மையாக மகள் என்பதை உணர்ந்து கொண்டார். அதுவரை ரோஜா தன்னுடைய மகள் இல்லை என்று கூறிய அப்பா மாணிக்கமும் தன் தவறை புரிந்துகொண்டு, ரோஜாவை மகளாக என ஏற்றுக் கொண்டார்.
இப்போது அனு செண்பகத்தின் உண்மையான மகள் இல்லை. ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை அனுவை தவிர வீட்டிலுள்ள அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஆனால், நீதிமன்றத்தில் டிஎன்ஏ சோதனை தீர்ப்பு வந்த பிறகுதான் அவளை வீட்டை விட்டு வெளியே துரத்த வேண்டுமென அர்ஜூன் முனைப்புடன் இருக்கிறான்.
இதில் ரோஜாவாக பிரியங்கா நல்காரி, அர்ஜூனாக ஷிபு சூரியன், செண்பகமாக டாக்டர் ஷர்மிளா, பாட்டி அன்னபூரணியாக நடிகை வடிவுக்கரசி, வில்லி அனுவாக விஜே அக்ஷயா உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ரோஜா சீரியல் குறித்த ஒரு வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த வாரம் ஒளிபரப்பான அந்த எபிசோடில், ரோஜா தன்னை செண்பகத்தின் மகள் என்று நிரூபிக்க டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க செல்கிறாள்.
ரோஜா டெஸ்ட் எடுத்துவிட்டால், இவ்வளவு நாளாக தான் கூறிய பொய், அம்பலமாகிவிடும் என நினைத்த அனு, ரோஜாவை கொல்ல திட்டமிட்டு, சரியான சமயத்தில் அவளை துப்பாக்கியால் சுட்டு விடுகிறாள். ஆனால் எப்படியோ ரோஜா அதிலிருந்து தப்பித்து விடுகிறாள்.
ஆனால் அனு தப்பிக்கக் கூடாது என்பதற்காக, ரோஜா உண்மையாக இறந்து விட்டது போல நம்பவைக்க அனைவரும் சேர்ந்து மாஸ்டர் பிளான் போடுகிறார்கள். அந்த சீன் தான் இருப்பதிலே ஹைலைட்.
அதன்படி, செண்பகம், அர்ஜூன், அஷ்வின், பூஜா, போலீஸ் அதிகாரி சந்திரகாந்தா, ரோஜா ஆகியோர் கூட்டு சேர்ந்து, ஏற்கெனவே இறந்த ஒரு பெண்ணின் முகத்தை ரோஜா முகம் போல மாற்றுகிறார்கள். அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லை. ஒரு சாதரண பொம்மை முகமூடியை இறந்த பெண்னின் முகத்தில் வைத்து அழுத்தினால் போதும். அட என்ன ஒரு மேஜிக்! அந்த பெண்ணின் முகம் ரோஜாவின் முகம் போல மாறிவிட்டதே!.
இப்படி ஒரு காட்சியை, உலகத்தில் வேறு எந்த சீரியல்களிலும் ஏன் ஹாலிவுட் படங்களில் கூட, நீங்கள் பார்த்திருக்க முடியாது. இந்த சீனைத் தான் நெட்டிசன்கள் இப்போது சோஷியல் மீடியாவில் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அதிலும் இதில், செண்பகமாக நடிக்கும் ஷர்மிளா உண்மையாகவே ஓரு டாக்டர். நிறைய டிபேட் ஷோக்களில் கலந்து கொண்டு, சமூக அரசியல், பகுத்தறிவு பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். அவருக்கா இப்படி ஒரு நிலைமை என நெட்டிசன்கள் வேற லெவலில் வைத்து செய்கின்றனர்.