Advertisment

பிக் பாஸ்7: தமிழில் பெயரைக்கூட சரியா எழுதத் தெரியாதா? ஜோவிகா எழுதியதற்கு வனிதா விளக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள ஜோவிகா தன்னுடைய பெயரை தமிழில் எழுதிய விதம் குறித்தும் அவர் எப்போதும் தூங்குவது குறித்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
jovika vanitha

ஜோவிகா - வனிதா விஜயகுமார்

Bigg Boss Jovika: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள ஜோவிகா தன்னுடைய பெயரை தமிழில் எழுதிய விதத்தைக் குறித்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் அதிகமாகத் தூங்குவதற்கு அவருடைய அம்மா வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த முறை பெரும்பாலும் இளம் போட்டியாளர்களே உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியை நோக்கி அதிகமான பார்வையாளர்களையும் ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதற்காக வைல்டு கார்டு எண்ட்ரியில் பிரபலமான போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளே அனுப்பி வைத்திருக்கின்றனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மிகவும் இளம் போட்டியாளர் என்றால் அவர் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாதான். 

வனிதாவின் மகள் ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்ற தகவல் வெளியானபோது, வனிதா விஜயகுமாரும் அதை மறைமுகமாக உறுதிப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா கலந்து கொண்டதும் அவருக்கு நிறைய ரசிகர்கள் ஆதரவு அளித்தனர். சமூக வலைத்தளங்களில் ஜோவிகா ஆர்மி பக்கங்கள் தொடங்கப்பட்டு ஜோவிகாவுக்கு ஆதரவாக ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். 

பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற முதல் வாரத்திலேயே, ஜோவிகாவின் படிப்பு தொடர்பாக மற்றொரு போட்டியாளரான விசித்ரா மற்றும் ஜோவிக இடையே பிரச்னை வெடித்தது. 

விசித்ரா அப்போது ஜோவிகாவை தமிழில் எழுதி காட்டு என்று விசித்திரா சொல்ல, எனக்கு தமிழ் படிக்க தெரியாது அதனால்தான் நானே ஸ்கூலுக்கு போகவில்லை என்று ஜோவிகா கூறினார். மேலும், படிப்பு மட்டும்தான் முக்கியம் என்று இல்லை. எனக்கு வேறு திறமை இருக்கிறது. என்னுடைய திறமையால் நான் முன்னேறுவேன் என்று ஜோவிகா பேசினார். இதனால், ஜோவிகா படிப்பு குறித்து பேசியது சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்து மோதல்கள் ஏற்பட்டது. 

இப்படியான நிலையில் சில தினங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா அதிகமாக தூங்கும் காட்சிகள் மட்டுமே ஹாட் ஸ்டார் 24 மணி நேரங்களிலும் இரவு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எபிசோடுகளிலும் காட்டப்படுகிறது. அவற்றில் ஜோவிகாவிற்கு அதிகமாக குளோசப் வைத்து அவர் தூங்குவதை காட்டுவதால் அதிகமான ரசிகர்கள் அவரை இதை சொல்லியே கிண்டல் செய்து வருகின்றனர். 

அதே போல, ஜோவிகா சில தினங்களுக்கு முன்பு ஒரு தோசைக் கல்லில் ‘தமிழ்’என்று எழுதுவதற்கு பதிலாக ‘தாமில்’ என்று எழுதியிருந்தார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதைத் தொடர்ந்து இப்போது தன்னுடைய பெயரை தமிழில் எழுதுவதற்கு முயற்சி செய்த ஜோவிகா,  தன்னுடைய பெயரை ஜோவிகா என்பதற்கு பதிலாக ஜோபவிகா என்று எழுதி வைத்திருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், தமிழில் தன்னுடைய பெயரைக்கூட தவறு இல்லாமல் சரியாக எழுதத் தெரியாதா என்று கேட்டு இதுதான் தமிழுக்கு வந்த சோதனையா? என்று கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து வீடியோக்களை வெளியிட்டு வரும் வனிதா விஜயகுமாரிடம், பிக் பாஸ் வீட்டில் உங்கள் மகள் அதிகமாக தூங்குவது போன்ற காட்சிகளே வந்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு வனிதா, ஆமாம் ஜோவிகா இப்போ ரொம்பவே மன உளைச்சலில் இருக்கிறார். அந்த வீட்டிற்குள் ரொம்ப டென்ஷன் ஏற்பட்டு விட்டால் தன்னாலே தூக்கம் வந்துவிடுவது இயல்புதான். அதை நானே அனுபவித்து இருக்கிறேன். ஜோவிகாவிற்கு எனக்கு முகத்தில் அடிபட்டு இருப்பது உணர்வு ரீதியாக தெரிந்து இருக்கிறது. அதனால் தான் ஜோவிகா அமைதியாக இருக்கிறார். அதனால், ஜோவிகாவிற்கு தூக்கம் வருகிறது” என்று பேசியுள்ளார். மகளுக்காக விளக்கம் அளித்து வனிதா விஜயகுமார் பேசிய வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

jovika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment