நெற்றிக்கண்: வைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் படம்!

Netrikann: 2011-ம் ஆண்டு வெளியான ‘பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக இது இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Netrikann: 2011-ம் ஆண்டு வெளியான ‘பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக இது இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nayanthara Vignesh Shivan, Netrikann

Nayanthara Vignesh Shivan

Nayanthara - Vignesh Shivan: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாரா, தற்போது நடிகர் விஜய்யுடன் ’பிகில்’, நடிகர் ரஜினிகாந்தின் ’தர்பார்’ ஆகியப் படங்களில் படு பிஸியாக உள்ளார்.

Advertisment

இவற்றை முடித்து விட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸின் முதல் தயாரிப்பு படத்தில் நடிக்கிறார். ‘நெற்றிக்கண்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை, ’அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்குகிறார். த்ரில்லர் களத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில், நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.

’நெற்றிக்கண்’ படத்தில் கண்பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக, மிலிசந்த் தெரிவித்துள்ளார். இதை வைத்துப் பார்க்கும் போது கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக இது இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில் நெற்றிக்கண் படபிடிப்பு தளத்தில் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், ”திரும்பவும் ஒன்றாக படப்பிடிப்பை தொடங்குகிறோம். ஆனால் வித்தியாசமான ரோல்களில்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Vignesh Shivan Nayanthara

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: