scorecardresearch

புது கேரக்டரை அறிமுகப்படுத்தும் விஜய்டிவி சீரியல் : ட்விட்ஸ்க்கு விடை கொடுப்பாரா?

Vijay Tv Serial : கடந்த சில நாட்களாக பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் புதிய கதாப்பாத்திரம் எண்ட்ரி ஆக உள்ளது.

புது கேரக்டரை அறிமுகப்படுத்தும் விஜய்டிவி சீரியல் : ட்விட்ஸ்க்கு விடை கொடுப்பாரா?

Tamil Serial Update : விஜய் டிவியின் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறன்றன. இதில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். மிர்ச்சி செந்தில் ரச்சிதா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும இந்த சீரியலில் நாள்தோறும் அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் முத்தரசுவை கொலை செய்தது யார் என்பது குறித்து நாள்தோறும் டுவிட்ஸ் மேல் டுவிஸ்டாக ஒரு கிரைம் த்ரில்லர் சீரியல் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதில் வாரா வாரம் ஒருவர் மீது சந்தேகம் வரும் அளவுக்கு கதைக்குள் ஏகப்பட்ட திருப்பங்களுடன் உள்ளது. இதனால் முத்தரசுவை கொன்றது யார் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் ரசிகாகள் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பம் இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் வந்த புரொமோவில் காயத்ரி தான் முத்துராசுவை கொல்வது போல் காட்டுகிறார்கள். அவர்கள் முதலில் காட்டிய முகம் வேறொரு போல் இருக்கிறது. இதில் என்ன டுவிஸ்ட் இயக்குனர் வைத்துள்ளார் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ள நிலையில், தற்போது புதிய திருப்பமாக மேலும் ஒரு புதிய கதாப்பாத்திரம் உள்ளே வருகிறது.  இந்த சீரியலில் மாயன் என்ற முதன்மை வேடத்தில் நடிக்கும் செந்தில் தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், மாறன் என்ற கதாப்பாத்திரம் விரைவில் சீரியலில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ள செந்தில், அந்த கதாப்பாத்திரம் கதவை திறந்துவிட்டு வெளியில் வருவது போன்ற காட்சியை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த காட்சி வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: New character entry in vijay tv naam iruvar namakku iruvar serial