விஜயகாந்த் படம் பெயரில் புது சீரியல்... பூஜையில் மாலையுடன் எதிர்நீச்சல் நடிகர்கள்!

எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்த நிலையில், அந்த சீரியலில் நடித்த முக்கிய நடிகர்கள் விஜயகாந்த் படப் பெயரில் உருவாகும் புது சீரியலில் நடிக்க உள்ளனர். எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் புது சீரியல் பூஜையில் கழுத்தில் மாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
new serial poo

எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் புது சீரியல் பூஜையில் மாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்த நிலையில், அந்த சீரியலில் நடித்த முக்கிய நடிகர்கள் விஜயகாந்த் படப் பெயரில் உருவாகும் புது சீரியலில் நடிக்க உள்ளனர். எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் புது சீரியல் பூஜையில் கழுத்தில் மாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

சன் டிவியில் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் அண்மையில் முடிவடைந்த நிலையில், அந்த சீரியலில் நடித்த முக்கிய நடிகர்கள் விஜயகாந்த் படப் பெயரில் உருவாகும் புது சீரியலில் நடிக்க உள்ளனர். புது சீரியலுக்கான பூஜை வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. பூஜையில் நடிகர்கள், சீரியல் குழுவினர் அனைவரும் மாலை அணிந்துகொண்டு நிற்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த புது சீரியலுக்கு விஜயகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற சொக்கத்தங்கம் படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில், எதிர்நீச்சல் சீரியல் தர்ஷன் கேரக்டரில் நடித்த நடிகர் ரித்திக் ராகவேந்திரா, ஜான்சிராணி கேரக்டரில் நடித்த காயத்ரி அதுபோல கரிகாலன் கேரக்டரில் நடித்த விமல் குமார் ஆகியோர் நடிக்க உள்ளனர். 

அதே போல, சன் டிவியில் விரைவில் முடிவடைய உள்ள பூவா தலையா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பாண்டி கமல், ஸ்வேதா மற்றும் சில சீரியல் பிரபல நடிகர்களும் இந்த புது சீரியலில் நடிக்க உள்ளனர். 

Advertisment
Advertisements

சொக்கத்தங்கம் சீரியலை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலை தயாரித்து வருகிறது. சொக்கத் தங்கம் சீரியல், சன் டிவியில் எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என்று தெரியவில்லை.

எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சிராணி மற்றும் கரிகாலன் இருவரும் நெகடிவ் கேரக்டரில் நடித்திருந்தாலும், இவர்களின் நடிப்புக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளனர். இவர்கள் சொக்கத்தங்கம் சீரியலில் என்ன மாதிரி கேரக்டரில் நடிக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: