Advertisment

பொதிகை டிவியில் விரைவில் புதிய சீரியல்கள்; முக்கிய வேடத்தில், ராதிகா, சுகன்யா, சந்திரமுகி பட நடிகை

பொதிகை தொலைக்காட்சி  HD வடிவில் ஒளிபரப்பாக உள்ளது. மீண்டும் புத்துயிர் பெற உள்ள பொதிகை டிவியில் பல புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளது. 

author-image
WebDesk
New Update
Bommi Suganya Radhika

முக்கிய வேடத்தில், ராதிகா, சுகன்யா, சந்திரமுகி பட நடிகை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தனியார் தொலைக்காட்சி சேனல்கள் இல்லாத காலத்தில், ஒரே தொலைக்காட்சியாக  இருந்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி பின்னர் பொதிகை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்கள் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கும். ஆனால், ஆகஸ்ட் 10, தமிழ் தாத்தா, நடிகர் விவேக் நடித்த அக்கறை பச்சை, விசாலம், அலிஃப் லைலா, சக்திமான், விஷ்ணு புராணம், மகா பாரதம், ஜெய் ஹனுமான் ஆகிய தொடர்கள் பார்வையாளர்களை ஈர்த்த சீரியல்கள். ஆனால், தனியார் சேனல்கள் வந்த பிறகு, பொதிகை  மெல்ல மெல்ல பார்வையாளர்களை ஈர்க்கத் தவறி விட்டது.

Advertisment

இந்நிலையில்தான், பொதிகை தொலைக்காட்சி  HD வடிவில் ஒளிபரப்பாக உள்ளது. மீண்டும் புத்துயிர் பெற உள்ள பொதிகை டிவியில் பல புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளது. 

அந்த வரிசையில் ராதிகா சரத்குமார் நடிப்பில் `ராடான்' தயாரிப்பில் `தாயம்மா குடும்பத்தார்' என்கிற தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில், 'சந்திரமுகி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை பொம்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றொரு புதிய சீரியலில் நடிகை சுகன்யா நடிக்கிறார்.

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி சேனல்கள் சீரியல்கள் மூலம் மொத்த பார்வையாளர்களையும் ஈர்த்து ஏகபோகமாக கோலோச்சி வருகின்றன. இந்நிலையில், பொதிகை தொலைக்காட்சியில் விரைவில் வரவிருக்கும் புதிய தொடர்கள் டி.ஆர்.பி-யில் முன்னிலை பெறுமா? ராதிகா சரத்குமார், சந்திரமுடி பட நடிகை, சுகன்யா ஆகியோரின் சீரியல்களால் பொதிகை மீண்டும் புத்துயிர் பெற்று மக்கள் மனதில் இடம் பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதே போல, 'பாக்கியலட்சுமி' தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரேஷ்மா, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ரேஷ்மா அதே நேரத்தில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் `சீதா ராமன்' சீரியலிலும் நடிக்கிறார்.

ஒரே நேரத்தில் 2 சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால், பிஸி ஷெட்டியூலில் இருக்கும் நடிகை ரேஷ்மா, இரண்டில் ஒரு தொடரில் மட்டும் தொடரவிருப்பதாக முடிவெடுத்துள்ளாராம். இது குறித்து ரேஷ்மா விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிகிறது.

அதே போல, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரன்னர் அப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மணி சந்திரா, நடன இயக்குனரும் நடிகருமான சாண்டியைச் சந்தித்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை அவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'குருநாதா' என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment