இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரபலங்கள் எப்படி புத்தாண்டு கொண்டாடி உள்ளனர், என்பதை தெரிந்துகொள்வோம்.
சமந்தா தனது இன்ஸ்டிராகிராமில் புகைப்படத்தை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். “ எளிமையாக மற்றும் புதிய தீர்மானங்கள் எடுங்கள். அன்பாகவும், கனிவாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள் “ என்று அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரித்துள்ளார். “ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்து.” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் எஸ்,ஜே. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தியும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் வீடியோவை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.