/tamil-ie/media/media_files/uploads/2018/11/deepika-padukone-ranveer-singh.jpg)
deepika padukone - ranveer singh, ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் திருமணம் கடந்த நவம்பர் 15ம் தேதி இத்தாலியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் புகைப்படங்களும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.
திருமணத்தை முடித்த தீபிகா - ரன்வீர் இருவரும் மும்பை திரும்பியுள்ளனர். இவர்கள் இருவரும் மும்பையில் 50 கோடி ரூபாய்க்கு புதிய வீடு ஒன்றினை வாங்கியுள்ளதாகவும், அதன் உட்புற அலங்கரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தியா திரும்பினர் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்
தற்போதைக்கு ரன்வீர் சிங்கின் இல்லத்தில் இருவரும் சிறிது காலம் இருக்கப்போவதாகவும், பிரத்யேகமாக அலங்கரிக்கப்படும் வீட்டின் பணிகள் விரைவாக முடிவடைந்தவுடன் இருவரும் புது இல்லத்திற்கு குடிபுக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
WATCH: Ranveer Singh and Deepika Padukone at Ranveer Singh's residence in Mumbai. They got married earlier this week in Italy's Lombardy pic.twitter.com/kgaiq87WTO
— ANI (@ANI)
WATCH: Ranveer Singh and Deepika Padukone at Ranveer Singh's residence in Mumbai. They got married earlier this week in Italy's Lombardy pic.twitter.com/kgaiq87WTO
— ANI (@ANI) November 18, 2018
இந்நிலையில் இன்று மும்பையில் உள்ள ரன்வீர் வீட்டிற்கு இந்த புது ஜோடி வந்துள்ளனர். அங்கிருந்து சிறிது நேரம் வெளியே வந்து அவர்களுக்காக காத்திருந்த செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு இதோ உங்களுக்காக...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.