/tamil-ie/media/media_files/uploads/2020/04/Sun-TV-News-Reader-Anitha-Sampath.jpg)
Tamil News Reader News: சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத்துக்கு இணையத்தில் ரசிகர்கள் அதிகம். அதோடு இவருடைய பெயரில் ட்விட்டரில் போலி அக்கவுண்டும், அதற்கு 50 ஆயிரத்திற்கு அதிகமான ஃபாலோயர்களும் உள்ளனர். தன் பெயரில் இப்படியான ஃபேக் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபரை கண்டுப்பிடித்து, தக்க நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையில் புகாரும் அளித்திருந்தார்.
4 நாள் முழு ஊரடங்க, 4 மாசம்ன்னு தப்பா புரிஞ்சிக் கிட்டாங்களோ?! – புகைப்படத் தொகுப்பு
தவிர, 2.0, சர்கார் உள்ளிட்ட படங்களில் செய்தி வாசிக்கும் காட்சிகளில் நடித்திருந்த அனிதா, சூர்யாவின் காப்பான் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில், தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார். எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போது கொரோனா பரவுவதைத் தடுக்க, முழு நாடும் ஊரடங்கு உத்தரவில் இருக்கிறது. ஆனால் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் மட்டும் வெளியில் வர அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில், செய்தி வாசிப்பாளராக தன் பணியை செய்து வந்தார் அனிதா.
கிருமிநாசினியை உடலில் செலுத்தினால் கொரோனா அழியுமா? ட்ரெம்ப் ; அதிர்ச்சியில் லைசால்
இந்நிலையில், ”கொரோனா பரவி வரும் வேகம் அதிகரித்துள்ளதால்.. well wishers request படி, வீட்டிலுள்ளோர் நலன்கருதி இன்றில் இருந்து 10 நாட்களுக்கு சிறு விடுப்பு எடுத்துள்ளேன். 10 நாட்களுக்கு செய்திகளில் வரமாட்டேன். சும்மா ஒரு முன்னெச்சரிக்கை தான். கொஞ்சம் மிஸ் பண்ற மாதிரி தான் இருக்கு. என்ன பண்றது. நீங்களும் பத்திரமா இருங்க.. அதுவரை தினமும் யூ-ட்யூபில் சந்திப்போம்” என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.