சபாஷ் சபாநாயகரே !

சபாநாயகர்  ட்ரெவர் மல்லார்ட் குழந்தையை வாங்கி நான் பார்த்துக்  கொள்கிறேன், நீங்கள் விவாதத்தில்  ஈடுபடுங்கள் என்று சொன்னார்.

newzeland speaker babysits
newzeland speaker babysits

நியூசிலாந்து சட்டமியற்றுபவர்கள் இந்த வாரம் பாராளுமன்றத்தில் எரிபொருள் விலையை கடுமையாக விவாதித்துக் கொண்டிருக்கும் போது , சபாநாயகர்  ட்ரெவர் மல்லார்ட்  அவையைப் பார்த்து, “சத்தம் போடாதீர்கள், குழந்தை பாட்டிலில் பால் குடித்துக் கொண்டிருக்கிறது” என்று சொன்னது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தொழிற்கட்சி எம்.பி யான தமதி கோஃபி மற்றும் அவரது கணவருக்கும்  வாடகை தாய் வழியாக கடந்த மாதத்தில்  Ttnekai என்ற குழந்தை பிறந்தது.  தமதி கோஃபி அக்குழந்தையை நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு எடுத்து வந்திருந்தார்.பின், தமதி கோஃபி  சபையில் எரிபொருள் விலை தொடர்பான விவாதத்தில் பேசிகொண்டிருக்கும்  போது குழந்தை அழஆரம்பித்தது.

உடனே, சபாநாயகர்  ட்ரெவர் மல்லார்ட் குழந்தையை வாங்கி நான் பார்த்துக்  கொள்கிறேன், நீங்கள் விவாதத்தில்  ஈடுபடுங்கள் என்று சொன்னார். பிறகு, பாட்டிலில் பால் குடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.

இது சிரிப்பு செய்தியாய் இருந்தாலும், இதற்க்கு பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்து உள்ளன என்பதே நிதர்சனமான உண்மை .

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Newzeland speaker action bottlefeeding siz months baby

Next Story
Bigg boss today promo : கவின் மேல் லாஸ்லியாவுக்கு வந்த திடீர் காதல்! அப்ப சாக்‌ஷி சொன்னதெல்லாம் உண்மை தானா?Bigg boss today promo
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com