/tamil-ie/media/media_files/uploads/2019/03/NGK-Audio-Release.jpg)
NGK Audio Release
Director Selvaraghavan Birthday special and surya's NGK Audio Release : இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்.ஜி.கே படத்தின் ஆடியோ குறித்த முக்கிய தகவல் ஒன்று அறிவித்துள்ளனர்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகின் இயக்குநராக அறிமுகமானவர் தான் செல்வராகவன். இவரின் தம்பி தனுஷ் அப்படத்தில் நடித்திருப்பார். பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவர் மற்றும் மயக்கம் என்ன உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.
NGK Audio Release : என்.ஜி.கே ஆடியோ ரிலீஸ்
இவரின் படங்கள் பெரும்பாலான மக்களுக்கு அதிகம் புரியாது என்றாலும், இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தற்போது இவரின் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் தான் என்.ஜி.கே. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
Birthday wishes to the radical @selvaraghavan ! Let the #NGKFire rage on with the #NGKAudioComingSoon ! ????@DreamWarriorpic@Suriya_offl@thisisysr@prabhu_sr@RelianceEnt@Sai_Pallavi92@Rakulpreetpic.twitter.com/8F1tsOvUXO
— Sony Music South (@SonyMusicSouth) 5 March 2019
இப்படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர்ஸ் தெரிவித்துள்ளது. இதனால் செல்வராகவன் பிறந்தநாள் ட்ரீட்டாக இந்த செய்து அமைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.