/tamil-ie/media/media_files/uploads/2019/04/D3n85LUU8AIQJhk.jpg)
NGK First Single releasing on April 12th
NGK first single: நடிகர் சூர்யா இயக்குநர் கே.வி.ஆனந்தின் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.
இதில் சூர்யாவுடன் இணைந்து மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதோடு இயக்குநர் செல்வராகவனின் ‘என்.ஜி.கே’ படத்திலும் நடித்து வருகிறார். ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, பாலாசிங், பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்திற்கு இசை செல்வாவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
இந்நிலையில், என்.ஜி.கே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், ஏப்ரல் 12-ம் தேதி வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
தவிர, ‘இறுதி சுற்று’ இயக்குநர் சுதா கொங்கராவின் புதிய படத்தின் படப்பிடிப்பும் தற்போது துவங்கியுள்ளது. சூர்யாவுக்கு இது 38-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.