Advertisment

NGK Movie Review: அரசியலில் ஜெயித்தாரா சூர்யா? - என்.ஜி.கே விமர்சனம்!

Suriya Starrer NGK Movie Review in Tamil: மொத்த படத்தையும் தோளில் சுமக்கும் சூர்யா...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NGK Public Review, NGK Movie Review, Ratings

Suriya-Sai Pallavi Starrer NGK Audience Movie Review: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

Advertisment

இதனை இயக்குநர் செல்வராகவன் இயக்கியிருக்கிறார். சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.

என்.ஜி.கே படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்காக 215 அடி உயரத்தில் கட் அவுட் தயார் செய்து வைத்தார்கள் திருவள்ளூர் மாவட்ட சூர்யா ரசிகர்கள். இதற்காக அவர்கள் 6.50 லட்சம் செலவு செய்திருந்தார்கள்.

ஆனால் முறையான அனுமதி பெறவில்லை என மாவட்ட ஆட்சியரின் பேரில் அந்த பிரமாண்ட கட் அவுட் அகற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை தொடங்கியிருக்கும் என்.ஜி.கே படத்தின் முதல் காட்சியைப் பார்த்து விட்டு, இணையத்தில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

அவற்றின் தொகுப்பை இங்கே வழங்குகிறோம்.

என்.ஜி.கே படத்தில் இடம் பெற்றிருக்கும் ’தண்டால்காரன்’ பாடல் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

மொத்த படத்தையும் தோளில் தூக்கி சுமக்கிறார் சூர்யா. சண்டைக் காட்சிகள் நன்றாக இயக்கப்பட்டுள்ளன. அரசியல் வேட்கையுள்ள இளைஞனிடம் இருக்க வேண்டிய ஃபயர் அப்படியே சூர்யாவிடம் இருக்கிறது.

 

 

 

எதிர்ப்பார்த்த அளவிற்கு என்.ஜி.கே படம் இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர், இந்நிலையில் இப்படத்திற்கு அமெரிக்காவில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

ப்ரீமியர் காட்சியில் இப்படம் 92 லொக்கேஷனில் 22 ஆயிரம் டாலர் வசூல் செய்துள்ளது, இன்னும் முழு ரிப்போர்ட் வரவில்லை. ப்ரீமியர் மற்றும் முதல் நாள் சேர்த்து 1 லட்சம் டாலரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பொதுவான அரசியல் படங்களில் இருக்கும் அதே கதை, அதே களம், அதே பிரச்னைகள் சலிப்பூட்டுகிறது. திரைக்கதையை சற்று வேகப்படுத்தியிருக்கலாம்.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை. மொத்தத்தில் சூர்யா ரசிகர்களுக்கு என்.ஜி.கே-வை நிச்சயம் பிடிக்கும்.

Surya Selvaraghavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment