NGK Trailer and Audio: ’காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை’ என தான் இயக்கிய முதல் மூன்று படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் செல்வராகவன்.
அதன் பின்னர் அவர், ’ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்’ ஆகியப் படங்களை இயக்கினார்.
செல்வாவின் ’நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் மன்னவன் வந்தானடி’ ஆகியப் படங்களின் வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது.
இந்நிலையில், தற்போது நடிகர் சூர்யாவை வைத்து இவர் இயக்கியிருக்கும் படம் தான், ‘என்.ஜி.கே’ அதாவது ‘நந்த கோபாலன் குமரன்’.
இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள்.
ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, ஜெகபதி பாபு, பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இதன் டீசர் காதலர் தின ஸ்பெஷலாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியானது.
இந்நிலையில் படத்தின் பாடல்களும், ட்ரைலரும் இன்று இரவு 7.30 மணிக்கு வெளியிடப்பட்டது.