Advertisment

பிரியங்கா சோப்ராவின் வருங்கால கணவர் அவரை விட 11 வயது இளையவரா?

பிரியங்காவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிரியங்கா சோப்ராவின் வருங்கால கணவர்  அவரை விட 11 வயது இளையவரா?

Nick Jonas and Priyanka Chopra Engaged: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான பாப் பாடகர் நிக் ஜோனஸை அடுத்த மாதம் கரம்பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழில் விஜய்யுடன் ’தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டில் மாபெரும் வெற்றியை பதித்து விட்டு , சில காலம் ஹாலிவுட்டில் தலைக்காட்டவும் சென்றார். ஹாலிவுர் சீரியஸ், நிகழ்ச்சி தொகுப்பாளர் என கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ராவும் பாப் பாடகர் நிக் ஜோனஸும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகினர்.

பிரியங்காவுக்கும், நிக் ஜோனசுக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் நகரங்களில் இருவரும் ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெருக்கத்தை அம்பலப்படுத்தின. அமெரிக்காவில் நடந்த நிக் ஜோனாஸ் குடும்ப திருமண நிகழ்ச்சியிலும், பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது உறவினர்களிடம் பிரியங்கா சோப்ராவை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

அதுமட்டுமின்றி சில தினங்களுக்கு முன்பு பிரியங்கா சோப்ரா மும்பையில் 100 கோடி ரூபாயில் வாங்கியுள்ள தனது வீட்டின் கிரகப் பிரவேசத்திற்கும் நிக் ஜோனஸ் உடன் வருகை தந்துள்ளார்.இப்படியிருக்க இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bollywood Actress Priyanka Chopra engaged to Nick Jonas

Priyanka chopra engaged, nick and priyanka engaged, priyanka chopra nick jonas, priyanka chopra age, priyanka chopra nick jonas photo, priyanka chopra nick jonas wedding, priyanka chopra engaged to nick jonas Priyanka Chopra engaged to Nick Jonas

இந்த தகவலுடன் மற்றொரு சர்ச்சையும் தற்போது வெடித்துள்ளது. பிரியங்கா சோப்ராவுக்கு 36 வயதாகிறது. இந்நிலையில் அவர் திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் நிக் ஜோனஸ் அவரை விட 10 வயது இளையவராம். முதலில் இவர்களின் திருமணத்திற்கு பிரியங்காவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன் பின்பு பிரியங்கா இதுப்பற்றி விளக்கமாக பேசி அவர்களின் சம்மத்தை வாங்கியுள்ளார்.

அடுத்த மாதம் இறுதியில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment