/tamil-ie/media/media_files/uploads/2020/07/Niharika-Konidela-gets-engaged-on-august-13th.jpg)
சிரஞ்சீவியின் சகோதரர், நாக பாபுவின் மகளும் நடிகையுமான நிஹாரிகா கொனிடலா சமீபத்தில் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார். அவருக்கு ’டெக்கி’ சைதன்யா ஜொன்னலகடாவுடன் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 வருஷமா ஒரே கதை… அப்ப நிச்சயமா ‘போர்’ தான்…
இப்போதைய, அப்டேட் என்னவென்றால், நிஹாரிகா மற்றும் சைதன்யா ஆகிய இருவரின் குடும்பத்தினர் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிச்சயதார்த்த விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் அவர்களின் திருமணம் நடக்கவிருக்கிறது. ஆனால் அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
சென்னையில் இடை விடாத மழை: தண்ணீரில் மிதந்த வாகனங்கள்
கடைசியாக வெளியான சிரஞ்சீவியின் ’சை ரா நரசிம்ம ரெட்டி’ உட்பட தெலுங்கில் சில திரைப்படங்களில் நிஹாரிகா கொனிடலா நடித்துள்ளார், மேலும் விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ மூலம் தமிழில் அறிமுகமானார். சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாளைக் கொண்டாடிய தனது வருங்கால கணவருக்கு, நிஹாரிகா தெரிவித்திருந்த பிறந்தநாள் வாழ்த்து சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.