சாதி என்னனு கூட கேட்டாங்க; ஆன கடைசி கேள்விக்கு பதில் தெரியல: ஜெயலலிதா குறித்து நிர்மலா பெரியசாமி ஓபன் டாக்!

அ.தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாரளாக உருவெடுத்த நிர்மலா பெரியசாமி, கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை நட்சத்திரப் பேச்சாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக பிரிந்த போது, ஓ.பி.எஸ் அணியில் இருந்தார்.

அ.தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாரளாக உருவெடுத்த நிர்மலா பெரியசாமி, கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை நட்சத்திரப் பேச்சாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக பிரிந்த போது, ஓ.பி.எஸ் அணியில் இருந்தார்.

author-image
WebDesk
New Update
Nirmala Periasamy Profile Popular news reader speak about former TN CM J Jayalalithaa Tamil News

நிர்மலா பெரியசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் உரையாடியது தொடர்பாக பேசியுள்ளார்.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றிவர் நிர்மலா பெரியசாமி. செய்தி வாசிக்கும்போது இவர் சொல்லும் 'வணக்கம்' என்ற வார்த்தைகே தனி ரசிகர்கள் உண்டு. அதேபோல் இவரது ஸ்டைலில் வணக்கம் சொல்வது ஒரு சில திரைப்படங்களில் கூட காமெடியாக முயற்சித்திருப்பார்கள். அந்த அளவிற்கு பிரபலமான இவர், பொதிகை, சன்டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பல சேனல்களில் பணியாற்றியுள்ளார் .

Advertisment

மேலும், ராஜ் டிவி மற்றும் மக்கள் தொலைக்காட்சியிலும் பணியாற்றியுள்ள நிர்மலா பெரியசாமி, ஜீ தமிழில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, சின்னத்திரையில், பலரின் கவனத்தை ஈர்த்திருந்திருந்தார். அதற்கு முன்பு செய்தி வாசிப்பாளராக இவர் பிரபலமான நபராக வலம் வந்தாலும், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி இவருக்கு ஒரு சிறப்பான அடையாளத்தை கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் 900-க்கு மேற்பட்ட எபிசோடுகளை நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கினார். 

இதன்பின்னர் அரசியலில் அடியெடுத்து வைத்த நிர்மலா பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். இவருடன் செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபுவும் அ.தி.மு.க-வில் இணைந்தார். அ.தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாரளாக உருவெடுத்த  நிர்மலா பெரியசாமி, கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை நட்சத்திரப் பேச்சாளர்  உள்ளிட்ட பல பதவிகளை வகித்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக பிரிந்த போது, ஓ.பி.எஸ் அணியில் இருந்தார்.

இந்நிலையில், நிர்மலா பெரியசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் உரையாடியது தொடர்பாக பேசியுள்ளார். வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "2004 ஜூன் 16 காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள தலமைச் செயலகம் சென்றேன். எல்லோரையும் பார்த்துவிட்டு, என்னை மட்டும் இன்னும் அழைக்கவே இல்லையே என நினைத்தேன். பிறகு 12 மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. 

Advertisment
Advertisements

12:50 மணி வரையில் நானும் அம்மாவும் மட்டும் பேசினோம். அது ஒரு நேர்காணல் போல் இருந்தது. என்னிடம் நிறைய கேட்டார்கள். எனது சாதி என்ன என்பது பற்றி கூட கேட்டார்கள். எனது படிப்பு, கணவர், பிள்ளைகள் குறித்தும், எனது குடும்ப பின்னணி குறித்தும் அவர் கேட்டார். கடைசியாக ஒரு கேள்வி கேட்டார். அது 'என்னுடைய லட்சியம் என்ன?' என்பது தான். அந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. 

இவ்வளவு தூரம் எனது தந்தையால் பயிற்றுவிக்கப்பட்டும் கூட என்னால் அந்தக் கேள்விக்கு விடை அளிக்க முடியவில்லை. அப்போது அம்மா எடுத்துக் கொடுத்தார்கள். நீங்கள் கட்சியில் சேர விரும்பினால் எங்களது கட்சியில் சேருங்கள். டி.வி என்றால், எங்களது டி.வி-யில் சேருங்கள் என்று சொன்னார். அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நான் தயங்குவதைப் பார்த்து அவர், நீங்கள் நேரம் எடுத்துக் கொண்டு சொல்லுங்கள் என்று சொன்னார். 

ஆனால், என்னை அழைத்துச் சென்ற டீம் எனக்குப் பிடிக்காவில்லை. அம்மாவுக்கு உண்மைத் தகவல் போகிறதா என்று எனக்குத் தெரியாமல் இருந்தது. வேறு ஒரு தெரிந்த நபர் மூலம் மீண்டும் அம்மாவிடம் கடிதம் கொடுத்து அ.தி.மு.க-வில் ஐயக்கியமாகி விட்டேன். 2004 ஆம் ஆண்டு முதல் அம்மாவின் தீவிர தொண்டர் ஆக்கினேன்." என்று நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார். 

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: