நடிகைகள் சாய் பல்லவி, நித்யா மேனன் தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்நிய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றனர். இருவருக்கும் ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர். இந்நிலையில், தமிழில் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு இந்தாண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் நித்யா மேனன் தேர்வு பற்றி பேசு பொருளானது. கார்கி படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு தேசிய விருது வழங்கி இருக்கலாம் என விவாதம் எழுந்தது. நித்யா மேனன் நடித்த திருச்சிற்றம்பலம் படம் ஒரு கமர்ஷியல் படம். இந்தப் படத்தினை ஒரு கலைப்படடைப்பு எனக் கூறிவிடமுடியாது. மேலும் நித்யா மேனன் ஏற்று நடித்த கதாபாத்திரம் ஒரு ஜாலியான கதாபாத்திரம் அதனை யாருவேண்டுமானாலும் நடிக்கலாம்.
ஆனால் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படம் அப்படி கிடையாது. அந்தப் படம் சமூக அக்கறை கொண்ட படம். அந்தப் படத்தில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருப்பார். படம் சமூகத்திற்கு தேவையான ஒருபடம். சாய் பல்லவிக்குத்தான் தேசிய விருது அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் சாய் பல்லவி ரசிகர்கள் விவாதத்தில் இறக்கினர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நித்யா மேனன் இதற்கு பதிலளித்தார்.
"எப்பொழுதும் கருத்துக்கள் இருக்கும், நீங்கள் விருது பெறவில்லை என்றால், 'ஓ, ஒருவேளை அவள் படம் நடிக்காமல் இருக்கலாம்' என்று கூறுவார்கள்.
ஆனால் நீங்கள் வாங்கும் போது, இந்தப் படத்துக்காக இல்லை, வேற படத்திற்கு கொடுத்திருக்கலாம். நீங்கள் விருது வாங்கவில்லை அவர்கள், 'அட ஏன் அவள் அதைப் பெறவில்லை?' என்பார்கள். இது எப்போதும் இருக்கும் என்று பதிலளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“