Nithya Menon Meets Deepika Padukone : பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை தீபிகா படுகோனே, வசீகரிக்கும் அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறார்.
Advertisment
திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி...
தற்போது இவர் ’சபாக்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இயக்குநர் மேக்னா குல்ஸார், இயக்கியுள்ள இப்படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இதில் லட்சுமி அகர்வாலாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸுடன் இணைந்து, மேக்னா குல்ஸார், தீபிகா படுகோனே இதனை தயாரித்துள்ளனர்.
Advertisment
Advertisements
A fun conversation about our films, our respective careers and more... coming on Zee soon ! ???????? it was so nice to talk to you @deepikapadukone ????
இந்நிலையில், திறமைகளுக்கு பெயர் போன தென்னிந்திய நடிகை நித்யா மேனன், தீபிகா படுகோனை சந்தித்திருக்கிறார். ”எங்கள் படங்கள், எங்களின் கரியர் என பலவற்றைப் பற்றிய ஒரு ஃபன் ஃபில்டு உரையாடல்... விரைவில் ஜீ-யில் வரும்! தீபிகா, உங்களுடன் பேசியது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. உங்களுடைய ‘சபாக்’ படத்தைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்று இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் நித்யா.
சமீபத்தில் முன்னணி ஊடகம் நடத்திய ரவுண்ட் டேபிள் என்ற நிகழ்ச்சியில் நடிகை, பார்வதியும் தீபிகாவும் சந்தித்து உரையாடினர். சினிமா மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்தைத் தவிர, தீபிகா படுகோனே, நித்யா மேனன் இருவருக்கும், நிறைய விஷயங்கள் ஒத்துப் போகின்றன. இருவரும் கார்டன் சிட்டியான பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர்கள். பாலிவுட் வாழ்க்கையைத் தொடர தீபிகா மும்பைக்குச் சென்று விட்டார், ஆனால் நித்யா இன்னும் பெங்களூருவில் தான் வசிக்கிறார்.
தீபிகாவின் ’சபாக்’ வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நித்யா மேனன் நடித்திருக்கும் ‘சைக்கோ’ வரும் ஜனவரி 24-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.