வெளிநாட்டு மாப்பிள்ளையை கரம் பிடித்த ‘நந்தினி’ சீரியல் கங்கா!

சீரியலை இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த நிலையை மாற்றி இளசுகளையும் பார்க்க வைத்த பெருமை நித்யாவையே சேரும்.

By: December 9, 2019, 12:57:23 PM

Nithya Ram’s Wedding : தற்போது சினிமா நடிகைகளுக்கு சமமான ரசிகர் பட்டாளத்தை, சீரியல் நடிகைகளும் கொண்டிருக்கிறார்கள். சினிமா நடிகைகளால் வருடத்திற்கு 3, 4 படங்கள் மட்டுமே நடிப்பார்கள். ஆனால் சீரியல் நடிகைகளோ ஞாயிற்றுக் கிழமை தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் டிவி-யில் தோன்றி, ரசிகர்களை மகிழ்விப்பார்கள்.

Nithya Ram Wedding நித்யா ராம் திருமணம்

அந்த வகையில் இயக்குநர் சுந்தர்.சி சின்னத்திரையில் இயக்குனராக அடி எடுத்து வைத்த நந்தினி சீரியலின் நாயகி நித்யா ராமுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்புவின் சொந்த தயாரிப்பில் உருவான நந்தினி சீரியல், 2017 ஆம் ஆண்டு தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இதில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை நித்யா ராம். சீரியலை இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த நிலையை மாற்றி இளசுகளையும் பார்க்க வைத்த பெருமை நித்யாவையே சேரும்.

நித்யாவுக்கு 2014-ம் ஆண்டு வினோத் என்பவருடன் திருமணமானது. ஆனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில் டிசம்பர் 6-ம் தேதி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெளதம் என்பவரை நித்யா மணப்பதாக முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட இத்திருமணம், கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது அந்த படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆக இருக்கும் நித்யாவை இனி பார்க்க முடியாதே என்ற தவிப்பில் முனங்குகிறார்கள் அவரது ரசிகர்கள்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Nithya ram married to gautham sun tv nandini serial

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X