’ஒருநாள் கூத்து’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
பின்னர் உதயநிதியுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’, விஜய் ஆண்டனியுடன் ‘திமிரு புடிச்சவன்’ ஆகியப் படங்களில் நடித்தார்.
தற்போது ’பார்ட்டி, ஜெகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல், சங்கத் தமிழன், வான், மாஃபியா’ ஆகியப் படங்கள் நிவேதாவின் கைவசம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ‘மெண்டல் மதிலோ’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகமானார் நிவேதா. இதனைத் தொடர்ந்து டோலிவுட்டின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனின் படத்தில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.
A beauti-ful performer with ever smiling face and abundance of talent. Welcome aboard #NivethaPethuraj! #AA19 @alluarjun #Trivikram @hegdepooja @MusicThaman #PSVinod @haarikahassine pic.twitter.com/PGhAGGB0aw
— Geetha Arts (@GeethaArts) 7 June 2019
இயக்குநர் திரி விக்ரம் இயக்கும் இந்தப் படம் அல்லு அர்ஜூனின் 19-வது படமாக உருவாகிறது. ஹாரிகா ஹாசினி கிரியேசன்ஸுடன் இணைந்து கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது. படத்தில் இன்னொரு நடிகையாக பூஜா ஹெக்டேவும் கமிட்டாகியுள்ளார்.
எமோஷனல் எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகும் இதில் நடிகை தபு, முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத் தக்கது.