மதுரை பெண்ணான நிவேதா பெத்துராஜ், நெல்சன் இயக்கத்தில் வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து, உதயநிதி உடன் என் மனசு தங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்து ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுன் திமிரு பிடிச்சவன், விஜய் சேதுபதி உடன் சங்கத் தமிழன் மற்றும் பிரபு தேவா உடன் பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பருவு என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை நிவேதா பெத்துராஜ்,“தன்னை பாய் ஃப்ரண்ட் ஒருவர் ஏமாற்றிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தான் தற்போது வைத்திருக்கும் கார் கடந்த காலங்களில் நான் நினைத்த கார் என்றும் வருங்காலத்தில் கார் எப்படி இருக்கும் என நினைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பிளஸ்டிக் சர்ஜரி குறித்து பேசிய நிவேதா பெத்துராஜ், “பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“