இந்தியாவைக் கதி கலங்க வைத்துள்ள சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், பிரபல நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
நிவேதா வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் “நம் நாட்டில் நிறையப் பிரச்சனைகள் உள்ளன. இவை அனைத்துச் சரி செய்ய முடியாது. ஆனால் சில பிரச்சனைகளைச் சரி செய்யலாம். சிறிய வயதில் நிறையப் பெண்கள் மற்றும் ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்போம். நானும் அதனை எதிர்கொண்டுள்ளேன். எனவே பெற்றோர்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டட் பற்றிக் கற்றுக்கொடுங்கள்.” என்று கூறினார்.
இணையத்தில் மூன்று பாகங்களாக வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வவேற்பை பெற்றுள்ளது.