தலைவர் 167: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் – நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் பொங்கலுக்கு, ‘பேட்ட’ திரைப்படம் வெளியானது.
நெடுநாள் கழித்து ரஜினி ரசிகர்களுக்கு மாஸ் விருந்து படைத்திருந்தது பேட்ட.
இதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்தப் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ரஜினி. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபோட்டோ ஷூட் தற்போது முடிந்துள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் 10-ம் தேதி மும்பையில் துவங்க இருக்கிறதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம் ரஜினி. 3 மாதம் மும்பையில் படப்பிடிப்பை நடத்திவிட்டு, பின்னர் முக்கியமான காட்சிகளை சென்னையில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இடைவெளியில் இல்லாமல் நடக்கும் படப்பிடிப்புக்கு இடையே ரஜினி மற்றும் குழுவினர், 18-ம் தேதி வாக்களிப்பதற்காக சென்னை திரும்புகிறார்களாம்.
இதற்கிடையே இந்த ‘தலைவர் 167’ படத்தில், ரஜினியின் மகளாக நடிகை நிவேதா தாமஸ் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இவர் ’பாபநாசம்’ படத்தில் கமல் மகளாகவும், ‘ஜில்லா’ படத்தில் விஜய் தங்கையாகவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.