New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/Darbar-Rajinikanth-Nivetha-thomas.jpg)
Darbar, Rajinikanth Nivetha thomas
Nivetha Thomas: நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Darbar, Rajinikanth Nivetha thomas
Darbar Rajinikanth: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது. படத்தில் மாஸாக காட்சியளித்து, தனது ரசிகர்களை குஷிப்படுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக தனது 167-வது திரைப்படமான ’தர்பார்’ படத்தில் ஒப்பந்தமானார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இதனை இயக்கி வருகிறார். முதன் முறையாக ரஜினியும் - முருகதாஸும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். ரஜினியின் 2.0 திரைப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம், இப்படத்தை தயாரித்துள்ளது.
And now for the world to know!
There is and will only be ONE #AadityaArunachalam
And he, is MY Appa.
Watch! Out!#Darbar ????
— Nivetha Thomas (@i_nivethathomas) October 18, 2019
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளன. அதோடு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், பிரதீக் பப்பர், சுனில் ஷெட்டி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘பேட்ட’ திரைப்படத்தைத் தொடர்ந்து, தர்பார் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தவிர, தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அதனை தற்போது உறுதிப்படுத்தியிருக்கிறது நிவேதாவின் ட்வீட். “இப்போது உலகம் அறியட்டும்! ஒரே ஒரு ஆதித்யா அருணாச்சலம் மட்டுமே உள்ளார். அவர் தான், என் அப்பா. தர்பாரை பாருங்கள்” என்ற அந்த ட்வீட்டின் மூலம் ரஜினியின் கதாபாத்திர பெயரையும் ரசிகர்களுக்கு தெரிய வைத்து விட்டார் நிவேதா!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.