Advertisment

கேரள அரசை ஒரு போஸ்டரில் கலங்கடித்த திரைப்படம் !

சமீபத்தில் கேரள திரையரங்கில் வெளியான ”நநா கேஸ் கொடு” திரைப்படம் கேரள அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த திரைப்படம் தொடர்பாக அடிக்கப்பட்ட விளம்பர போஸ்டர்களில் “ நீங்கள் வரும் வழியில் குழி இருக்கும். ஆனால் படத்திற்கு வந்துவிடுங்கள்” என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
கேரள அரசை ஒரு போஸ்டரில் கலங்கடித்த திரைப்படம் !

சமீபத்தில் கேரள திரையரங்கில் வெளியான ”நநா கேஸ் கொடு” திரைப்படம் கேரள அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த திரைப்படம் தொடர்பாக அடிக்கப்பட்ட விளம்பர போஸ்டர்களில் “ நீங்கள் வரும் வழியில் குழி இருக்கும். ஆனால் படத்திற்கு வந்துவிடுங்கள்” என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

நடிகர் குஞ்சாக்கோ போபன் இந்த படத்தில் நடித்துள்ளார். நீதிமன்றத்தில்  நடக்கும் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக படம் நகர்கிறது என்றாலும். இந்த படத்தில் கேரள சாலைகளில் இருக்கும் குழிகளைப்பற்றிய விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் கேரள ஆளும் கட்சியான சிபிஐ (எம்) மற்றும் அதன் கூட்டணியினர் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

பிரேம் குமார், என்ற சிபிஐஎம் ஆதாரவாளர் தனது பேஸ்புக் தளத்தில் “இத்திரைப்படம் நாங்கள் செய்யும் கடின உழைப்பை அவமதிப்பதாக இருக்கிறது. இது மக்களுக்கு எதிரான கருத்துக்களை திட்டமிட்டு உருவாக்குகிறது. மேலும் ஆளும் கட்சியை விமர்சிக்க வேண்டி என்றே இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க போவதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

இதுபோல வழக்கறிஞர் ரஷ்மிதா ராமசந்திரன் ” நான் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த விளம்பரத்தை பின்வாங்கினால் மட்டுமே திரைப்படத்தை பார்ப்பேன் என்றும் அதற்கு மன்னிப்பு கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் வி டி சதீஷன் “ பேச்சு உரிமையின் பாதுகாவலர்கள் என்று கூறுபவர்கள், ஒரு சினிமா போஸ்டரை பொறுத்துகொள்ள முடிவில்லை. ஒரு சின்ன விமர்சனத்தையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தெரிகிறது.

கேரள எழுத்தாளர் பெஜமின் பென்னி “ ஒரு திரைப்பட போஸ்டர் உங்களை பாதிக்கிறது என்றால், உங்களிடத்தில் ஏதோ தவறு இருக்கிறது. நாம் நிச்சயம் திரையரங்கிற்கு சென்று பார்ப்பேன்” என்று கூறியுள்ளார்.

கேரள அமைச்சர் முகமது ரியாஸ், “ இது ஒரு ஆரோக்கியமான விமர்சனமாகவே பார்க்கிறேன். அந்த போஸ்டரில் அப்படியே இருக்குட்டும்” என்று கூறியுள்ளார்.

கேரளாவில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் கேரள சாலைகள் பழுதாகி உள்ளதால் கடந்த வாரம், டூவிலர் ஓட்டுநர் திருசூர்- கொச்சி நெடுஞ்சாலை உயிரிழந்தார்.

இந்த சாலைகள் சீரமைப்பு தொடர்பாக கேரள இடதுசாரிகளும்,  பாஜவினர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லிகொள்கின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை கேரள உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து, கேரள சாலைகளில் விபத்துகளால் உயிரிழக்கும் வழக்கை எடுத்து விசாரித்தது.

இந்நிலையில் தேசிய நெஞ்சாலைகள் ஆணையம் மற்றும் திருசூர், எர்னாகுமளம் மாவட்ட ஆட்சியர்கள் ஒரு வாரத்தில் சாலைகளில் உள்ள குண்டு குழிகளை சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படம் விமர்சனங்கள் தொடர்பாக  நடிகர் குஞ்சாக்கோ போபன் கூறுகையில், “ இந்த திரைப்படம் எந்த அரசியல் கட்சிகளை விமர்சிக்கவில்லை. நான் அந்த பேஸ்டரை ரசிக்கிறேன். எல்லா அரசியல் கட்சியினரும் சாதாரண மக்கள் பிரச்சனையை புரிந்துகொள்ள வேண்டும். படம் பார்த்தால் உங்களுக்கு புரியும் “ என்று கூறியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்  சந்தோஷ் டி திருவில்லா கூறுகையில் “ இந்த படம் 2018ம் ஆண்டில் பதிவு செய்திருக்கிறோம். இந்த திரைப்படம் தொடர்பாக அமைச்சரிடத்தில் பேசியிருக்கிறோம் “ என்று கூறியுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment